முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''விஜய் மட்டுமல்ல, அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான்'' - சரத்குமார் வைத்த ட்விஸ்ட்

''விஜய் மட்டுமல்ல, அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான்'' - சரத்குமார் வைத்த ட்விஸ்ட்

சரத்குமார்

சரத்குமார்

இவர் சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் தான் என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் சாதிக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் தான் என பேசினார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு மற்றும் துணிவு படங்களும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் விஜய் தான் நம்பர் 1 நடிகர், அஜித் அடுத்த இடத்தில்தான் இருக்கிறார் என தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து யார் நம்பர் 1 என இரண்டு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். இந்த நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர், விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார், தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் விஜய்யை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், சூர்ய வம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே இதனை நான் கூறினேன் என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரஜினியின் சாதனைகளை பட்டியலிட்டு அன்றும் இன்றும் என்றும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதித்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சரத் குமார், நான் ரஜினி சார் சூப்பர் ஸ்டார் இல்லையென்று சொல்லவில்லை. அஜித்குமார் சூப்பர் ஸ்டார் இல்லையென்று நான் சொல்லவில்லை. விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று தான் சொன்னேன். ரசிகர்களை கவர்கின்ற எல்லா நடிகர்களும் சூப்பர் ஸ்டார் தான். அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் சூப்பர் ஸ்டார்கள்தான். இவர் சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் தான் என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் சாதிக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் தான் என பேசினார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான குடும்ப ரசிகர்களின் பலம் இருக்கிறது. அஜித்துக்கும் வீரம், வேதாளம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஃபேமிலி சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த கதையைத் தேர்ந்தெடுத்து வருகிறார். இதன் காரணமாக விஸ்வாசம் படம் மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது அனைவரும் அறிந்ததே. இதனால் வாரிசு, துணிவு படங்களில் எந்தப் படம் வெற்றிபெறும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

First published:

Tags: Sarathkumar, Thunivu, Varisu