அஜித் உருவாக்கிய ஹெலிகாப்டர் - வியந்து பாராட்டி அறிக்கை வெளியிட்ட வாரியோ நிறுவனம்

நடிகர் அஜித் வாரியோ என்ற ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்து அந்த நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 

news18
Updated: December 4, 2018, 4:25 PM IST
அஜித் உருவாக்கிய ஹெலிகாப்டர் - வியந்து பாராட்டி அறிக்கை வெளியிட்ட வாரியோ நிறுவனம்
வாரியோ ஹெலிகாப்டர்ஸ் | அஜித்
news18
Updated: December 4, 2018, 4:25 PM IST
நடிகர் அஜித் வாரியோ என்ற ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்து அந்த நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 

நடிகர் அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் கைதேர்ந்தவர். புகைப்படக்கலை, ஆளில்லா விமானங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வரும் அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்களுக்கு ட்ரோன் குறித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

அவர் ஆலோசனையின்படி தக்‌ஷா குழு சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இதன் அடுத்த முயற்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மனி சென்ற அஜித், அங்கு வாரியோ என்ற ஹெலிகாப்டர் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
அஜித் உடனான சந்திப்பு குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வாரியோ நிறுவனம், “அஜித்தின் ஆர்வங்களுக்கு எல்லைகள் இல்லை. தனது படப்பிடிப்பு முடிந்தவுடனேயே அவர் எங்களுடன் சில நாட்கள் செலவிட ஜெர்மனிக்கு புறப்பட்டுவிட்டார்.

கார் ரேஸ் போன்று வாரியோ ஹெலிகாப்டர்கள் மீதும் அவருக்கு ஆர்வம் அதிகம். தனக்கே உரிய தனி வழியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர் அஜித். தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அவர் உருவாக்கியிருந்த வாரியோ ஹெலிகாப்டரின் மாதிரிகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. பகல் பொழுதில் படப்பிடிப்பு முடித்துவிட்டு, மாலை நேரங்களில் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது.”

Loading...
இவ்வாறு வாரியோ ஹெலிகாப்டரின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க: காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதைபெண்கள் விடுதியில் கேமரா பொருத்தி பார்த்தவர் கைது! - வீடியோ

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...