நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் - வரலட்சுமி சரத்குமார் அதிரடி!

news18
Updated: August 13, 2019, 3:58 PM IST
நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் - வரலட்சுமி சரத்குமார் அதிரடி!
வரலட்சுமி சரத்குமார்
news18
Updated: August 13, 2019, 3:58 PM IST
நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

விமல் நடிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கன்னி ராசி’. படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குநர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகை வரலட்சுமி, “பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் , யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்” என்றார்.

வீடியோ பார்க்க: ரஜினியின் அரசியல் தர்பார்

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...