ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் வரலட்சுமியின் படமும் டிஜிட்டலில் ரிலீஸ்

வரலட்சுமி சரத்குமாரின் டேனி திரைப்படம் விரைவில் டிஜிட்டல் தளத்தில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் வரலட்சுமியின் படமும் டிஜிட்டலில் ரிலீஸ்
வரலட்சுமி
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாதம் முதலே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் திரைக்கு வர தயாராகிருக்கும் சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் ஆகிய படங்கள் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் அந்த வரிசையில் தற்போது வரலட்சுமி சரத்குமாரின் திரைப்படமும் இணைந்துள்ளது. சந்தானமூர்த்தி இயக்கத்தில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியிருக்கும் டேனி திரைப்படம் ஜீ5 தளத்தில் விரைவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க: அருண் விஜய்யின் பரபரப்பு அறிக்கை...! பாக்ஸர் படத்தில் சிக்கலா?

ஒரு கொலைக்கு காரணமான நபர்களை போலீஸ் அதிகாரி வரலட்சுமி கண்டுபிடிப்பதுதான் இந்தப் படத்தின் கதை. அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading