தனது திருமணம் பற்றி வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

சந்தீப் என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், அதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின

தனது திருமணம் பற்றி வரலட்சுமி சரத்குமார் விளக்கம்
வரலட்சுமி சரத்குமார்
  • Share this:
தனது திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் காட்டமாக விளக்கமளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமியை திருமண வதந்திகளும் சுற்றி வருகின்றன. ஆரம்பத்தில் விஷால் - வரலட்சுமி திருமணம் குறித்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் விஷாலுக்கும் அனிஷா ரெட்டி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில் தற்போது வரலட்சுமி சந்தீப் என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், அதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார், “எனக்குத் திருமணம் என்ற தகவலை அறியும் கடைசி நபராகவே நான் எப்போதும் இருக்கிறேன். அதே முட்டாள்தனமான வதந்திகள். என் திருமணத்தில் ஏன் எல்லோரும் ஆர்வமாக உள்ளார்கள்? எனக்குத் திருமணம் என்றால் அதை நானே அனைவரும் அறியும்படி உரக்கச் சொல்வேன். எனக்குத் திருமணம் இல்லை. நான் திரைத்துறையை விட்டு விலகவும் இல்லை” என்று கூறியுள்ளார்.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading