நேற்று தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடினார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. அவரது நடிப்பில் அகண்டா திரைப்படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில், தனது புதிய பட அறிவிப்பையும் வெளியிட்டார். இது அவரது 107-வது திரைப்படம்.
தொடையை தட்டி சுமோவை பறக்க விடுவது, கையைத்தட்டி ரயிலை நிற்க வைப்பது, கண்ணசைவில் புயலை வரவழைப்பது என்று திரையில் சூப்பர்ஹீரோ வேலைகள் செய்கிறவர் பாலகிருஷ்ணா. அவர் படங்களில் சண்டைக்காட்சிகள் யதார்த்தமாக இருந்தால் அது இயல்புக்கு மாறானது. யதார்த்தத்தை மீறினால் அதுவே இயல்பு. பாலகிருஷ்ணாவின் சண்டையை விட நடனம் அதிபயங்கரமானது. தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரை அவரின்றி அணுவும் அசையாது.
பாலகிருஷ்ணா எந்த நடிகை தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என விரும்புகிறாரோ அவர் கண்டிப்பாக நடித்தாக வேண்டும். முடியாது என்றால் தெலுங்கு சினிமாவை மறந்துவிட வேண்டியது தான். ஸ்ரேயா, ப்ரியாமணி, ராய் லட்சுமி, சிம்ரன், சினேகா, நயன்தாரா, த்ரிஷா என அவருடன் நடிக்காத முன்னணி நடிகைகள் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போதைய விஷயத்துக்கு வருவோம். பாலகிருஷ்ணாவின் 107-வது படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். இவர்கள் தவிர இந்தப் படத்தில் பங்களிப்பு செய்யும் ஒரேயொருவரின் பெயரையே அறிவித்திருக்கிறார்கள், அது வரலட்சுமி. கோபிசந்த் மலினேனி இதற்கு முன் இயக்கிய க்ராக் படத்தில் வரலட்சுமி நடித்தார். அதில் அவரது நடிப்பைப் பார்த்து மயங்கிப் போய் இந்தப் படத்தில் ஒப்பந்ம் செய்ததாக கூறியுள்ளார். எனினும் படத்தின் நாயகி அவர் இல்லை. ஸ்ருதிஹாசனை நாயகியாக நடிக்க வைக்க அவரை அணுகியிருந்தனர். க்ராக் படத்தில் ஸ்ருதி நடித்திருந்ததால் ஓகே சொல்வார் என்ற நம்பிக்கை. ஆனால், கால்ஷீட் இல்லையென அவர் கைவிரிக்க, இப்போது த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.