சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிக்கும் மைக்கேல் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய படம் மைக்கேல். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் தயாராகும் இந்த ஆக்ஷன் என்டர்டெயினரில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இவர் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்களில் நடித்தவர். மைக்கேலில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இது ஆக்ஷன் அதிரடி நிறைந்த வேடம் என்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி.
இந்தப் படத்தில் புதிதாக வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். போடா போடியில் நாயகியாக அறிமுகமான வரலட்சுமி நாயகி வேடங்களை தூக்கிப் போட்டு வல்லி, குணச்சித்திரம் என நடிக்க ஆரம்பித்த பின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அதிக வாய்ப்புகள் தேடி வருகின்றன. சமீபத்தில்கூட பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் தெலுங்குப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமானார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகி லதா மங்கேஷ்கர்... தொடர்ந்து ஐசியூ-வில் அனுமதி
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் நாராயண் தாஸ் நரங் வழங்க, பரத் சௌத்ரி, புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.