தனது சகோதரரின் திருமணத்தில் க்யூட்டாக நடனமாடிய வரலட்சுமியின் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பன்முகத்திறமை கொண்ட நடிகையாக தனக்கென ஓர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் தெலுங்கில் 'நாந்தி' மற்றும் 'கிராக்' ஆகிய படங்களில் தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதில் அவரது நடிப்பு ரசிகர்களையும் விமர்சகர்களையும் வென்றுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் தனது உறவினர், சகோதரர் ராம்குமார் சுதர்சனின் திருமணத்தில் கலந்துக் கொண்ட வரு, "வாத்தி கம்மிங்" மற்றும் "என்ஜாய் எஞ்சாமி" போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு கலக்கலாக மாறி, விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்தார். சரத்குமாரின் மறைந்த மூத்த சகோதரர் சுதர்ஷனின் மகன் தான் ராம்குமார். இதில் வரலட்சுமியின் தங்கை பூஜாவும் இடம் பெற்றிருந்தார்.
திருமணத்தில் வரு அணிந்திருந்த பாரம்பரிய உடை ஃபேஷன் ஆர்வலர்களின் மனதை வென்றிருக்கிறது. அதோடு ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் லைக்ஸ் மழையை பொழிந்து வருகின்றனர். தவிர, 'ஒன்', 'ரணம்', 'காட்டேரி', 'பாம்பன்', 'சேஸிங்', 'பிறந்தாள் பராசக்தி', 'கலர்ஸ்' மற்றும் 'யானை' உள்ளிட்ட பல படங்களை தற்போது கைவசம் வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.