உங்களைப்பற்றி நினைக்காமல் எங்களைப் பாதுகாத்து வருகிறீர்கள் - காவல்துறையினரை கடவுளுக்கு சமம் எனப் போற்றிய வரலட்சுமி..!

நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடும் வெயிலிலும் நின்று கொண்டு உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தன்னையும், தன் குடும்பநலனையும் பார்க்காமல் கொரோனா காலத்தில் மக்களுக்காக இரவு பகலாக உழைத்துவரும் காவல் துறையினருக்கு தானும், சமூகமும் பெரிய கடன் பட்டிருப்பதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ”காவல்துறையினருக்கு மிகப்பெரிய நன்றி. இரவும் பகலுமாக எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரும் பார்க்கவில்லை என நினைக்காதீர்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களுக்கு அவ்வளவு கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எங்களுடைய நல்லதுக்குத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய உயிரையும் பாதுகாக்காமல் எங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. கடும் வெயிலிலும் நின்று கொண்டு உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள் என வரலட்சுமி சரத்குமார் ட்விட்டர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Gunavathy
    First published: