ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'வரலாறு முக்கியம்' திரைப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’ – நடிகர் ஜீவா

'வரலாறு முக்கியம்' திரைப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’ – நடிகர் ஜீவா

வரலாறு முக்கியம் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு

வரலாறு முக்கியம் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு

ரசிகர்கள் நல்ல நகைச்சுவை படங்களை கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு 'லவ் டுடே' திரைப்படம் உதாரணம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

'வரலாறு முக்கியம்' திரைப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜீவா தற்போது வரலாறு முக்கியம் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்த திரைப்படத்தை சந்தோஷ் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார். இந்த இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் நடிகர் ஜீவா, நாயகி ப்ரக்யா, காமெடி நடிகர்கள் ஷாரா, TSK, இயக்குநர் சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜீவா, ஜாலியான படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன்.  சிவா மனசுல சக்தி,  என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று பலரும் கேட்டனர்.

நவம்பர் மாத ஓடிடி ரிலீஸில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள்…

ஆனால் ஜிப்ஸி, 83 உள்ளிட்ட படங்களில் நடித்ததால் இது போன்ற படங்களில் நடிக்க முடியாமல் போனது. 'வரலாறு முக்கியம்' படத்தை கொரோனா காலகட்டத்தில் தொடங்கினோம். அந்த சூழலில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்று நினைத்தோம்.  அதனால் ஜாலியான ஒரு திரைப்படமாக வரலாறு முக்கியம் இருக்கும் என தெரிவித்தார்.

அத்துடன் ரசிகர்கள் நல்ல நகைச்சுவை படங்களை கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு 'லவ் டுடே' திரைப்படம் உதாரணம்.  அதுபோல இந்த திரைப்படமும் நிறைய நகைச்சுவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும் தன்னுடைய சிவா மனசுல சக்தி படம் போன்று இது இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

வாரிசு படத்திலிருந்து இரண்டாவது பாடல்… அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

அவர் பேசும் போது நடிகை,  நகைச்சுவை நடிகர் என அனைவரையும் கலாய்த்து பேசினார்.  குறிப்பாக, வரலாறு முக்கியம் படத்தில் நடித்துள்ள வி.டி.வி கணேஷ் போன்று பேசி கலாய்த்தார். இவரை தவிர ஷாரா, நடிகை ப்ரக்யா, உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்தது குறித்தும், ஜீவாவின் சிவா மனசுல சக்தி படத்தை பார்த்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.

First published:

Tags: Kollywood