ராஜபார்வை ரகசியம்.. அம்பலமானது எப்படி?

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான 'ராஜபார்வை' படத்தின் வெளிநாட்டு உரிமையில் மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜபார்வை ரகசியம்.. அம்பலமானது எப்படி?
  • Share this:
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ராஜபார்வை'. இந்தப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே.என்.பாபுரெட்டி என்ற தயாரிப்பாளரிடம் விற்றுள்ளார்.

15 ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை வாங்கி வெளிநாடுகளில் விநியோகம் செய்துவருபவர் மலேசியா பாண்டியன். இவர் பாபுரெட்டியிடம் ராஜபார்வை படத்தின் வெளிநாட்டு உரிமையை 20 லட்ச ரூபாய்க்கு விலைபேசி முடித்து அதற்காக பத்து லட்ச ரூபாயும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறிய பாபுரெட்டி படத்தை முடிக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் கோபமடைந்த மலேசியா பாண்டியன் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டுள்ளார்.


ஆனால் பாபுரெட்டி பணத்தை திருப்பித்தராமல் முரண்டு பிடிக்கவே, விஷயம் தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் அருண்பாண்டியன் கவனத்திற்கு சென்றது. விரைவில் பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக அவர் முன்னிலையில் பாபுரெட்டி மலேசிய பாண்டியனிடம் உறுதி அளித்துள்ளார் .

அந்த சமயத்தில் தான், கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திரையுலகின் நிலைமை தலைகீழாகவிட்டது இதை பயன்படுத்தி பாபு ரெட்டி தன்னிடமிருந்த 'ராஜபார்வை படத்தின் மொத்த உரிமையையும் விஜய ராஜேஷ் ரங்கப்பா என்பவருக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

விஜயராஜேஷ் ரங்கப்பா, படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபலமான ஏபி இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு 17 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார். இதனால் தனக்கு படத்தின் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்ட நிலையில், மற்றொருவருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக பாபுரெட்டி மீது சென்னை காவல் ஆணையரிடம் மலேசியா பாண்டியன் புகார் அளித்துள்ளார்.இவரது புகார் தொடர்பாக பாபுரெட்டியிடம் விளக்கம் கேட்டபோது, தயாரிப்பு கவுன்சிலில் இந்த விவகாரம் இருப்பதால், வெளிப்படையாக எதையும் பேச முடியாது எனச் சொல்லி முடித்துக்கொண்டார். திரையரங்குகள் திறப்பது தொடர்ந்து தள்ளிப்போவதால், ராஜபார்வை படத்தை ஓடிடி என டிஜிட்டல் தளத்தில் வெளியிடுவதற்கான முயற்சியை தயாரிப்புக்குழு மேற்கொண்டு வருகிறது.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading