புனிதர் போல நடந்துகொள்ள வேண்டாம் - விஷாலை கடுமையாக கண்டித்த வரலட்சுமி!

news18
Updated: June 14, 2019, 7:05 PM IST
புனிதர் போல நடந்துகொள்ள வேண்டாம் - விஷாலை கடுமையாக கண்டித்த வரலட்சுமி!
வரலட்சுமி சரத்குமார் | விஷால்
news18
Updated: June 14, 2019, 7:05 PM IST
விஷால் வெளியிட்ட தேர்தல் வீடியோவுக்கு நடிகை வரலட்சுமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

2019-2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக இருந்து இதனை நடத்துகிறார்.

நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 69 பேர் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு அணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷால் அணி சார்பாக தேர்தல் பிரசாரத்துக்காக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத் தேர்தலில் முறைகேடு செய்ததாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து தனது தந்தையை தவறாக சித்தரித்ததற்கு கண்டனம் தெரிவித்து நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பவாதவது, “நீங்கள் வெளியிட்ட நடிகர் சங்கத் தேர்தலுக்கான வீடியோவால் எனக்கு மிகவும் வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

மிகவும் தரங்கெட்ட முறையில் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவால் உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது. எனது அப்பாவின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்காமல் நீங்கள் இப்படி பேசுவது வருத்தமாக உள்ளது. சட்டத்தை மதிப்பதாக கூறுகிறீர்கள். அதே சட்டத்தில் தான் ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்று கூறப்பட்டுள்ளது.

எனது அப்பா குற்றவாளியாக இருந்திருந்தால் இந்நேரம் அவர் தண்டனை பெற்றிருப்பார். இந்த வீடியோ உங்களுடைய தரத்தை வெளிப்படுத்தியுள்ளது. உங்களைச் சொல்லி குற்றமில்லை. உங்களது வளர்ப்பு அப்படி.

நீங்கள் புனிதர் போல நடந்துகொள்ள வேண்டாம். நீங்கள் புனிதராக இருந்திருந்தால் பாண்டவர் அணியில் இருந்தவர்கள் உங்களை விட்டு சென்றிருக்கமாட்டார்கள். புதிய அணியும் தோன்றியிருக்காது.

நீங்கள் செய்த நல்லதை சொல்லி பிரசாரத்தை எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால் என்னுடைய அப்பா நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடாத இந்த சமயத்தில் அவரை கீழிறக்கி ஏன் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.

உங்களைப் பற்றி பலரும் சொல்லும் கருத்து தவறாக இருக்கமுடியாது. இவ்வளவு காலமும் உங்களை மதித்தேன். ஒரு தோழியாக உங்களுக்கு ஆதரவாக இருந்தேன். ஆனால் இதை இவ்வளவு தூரம் கொண்டுவந்துவிட்டீர்கள்.

நீங்கள் சாதித்ததைச் சொல்லி நேர்மறையான வீடியோ வெளியிடுவதற்கு பதிலாக கீழ்த்தரமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறீர்கள். திரைக்கு வெளியே நீங்கள் நல்ல நடிகர் என நான் நினைக்கிறேன். நீங்கள் கூறுவது போல உண்மை வெல்லட்டும். என்னுடைய வாக்கை இழந்துவிட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: விஜயகாந்திடம் ஆதரவு கோரிய பாக்யராஜ் அணி!

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...