• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சன் டிவியில் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ ட்ரெய்லர் வெளியீடு

சன் டிவியில் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ ட்ரெய்லர் வெளியீடு

வணக்கம்டா மாப்ள

வணக்கம்டா மாப்ள

ஜி.வி.பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
மிஸ்டர் லோக்கல் படத்தை அடுத்து எம்.ராஜேஷ் இயக்கியுள்ள படம் ‘வணக்கம்டா மாப்ள’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, பிக்பாஸ் டேனியல், ஆனந்தராஜ், ரேஷ்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் இத்திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் கப்பலில் பணியாற்றுபவராக நடித்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்து தனது முந்தைய பட பாணியில் இத்திரைப்படத்திற்கும் இயக்குநர் எம்.ராஜேஷ் கதை அமைத்திருப்பது ட்ரெய்லர் காட்சிகளில் தெரிகிறது.

சன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக யோகி பாபுவின் ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படமும் சன் தொலைக்காட்சியில் ரிலீசானது. அந்த வகையில் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த போது ஓடிடி தளங்கள் மூலமாக புதிய திரைப்படங்கள் வெளியாகின. ஓடிடி தளங்களைத் தொடர்ந்து தற்போது தொலைக்காட்சியிலும் நேரடியாக புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: