எனக்கென யாரும் இல்லை... திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது ஏன்? - கண்ணீருடன் வனிதா விஜய்குமார் விளக்கம்

தனது 3-வது திருமணம் குறித்தும் ஏன் அந்த தேதியை தான் திருமணத்திற்காக குறித்தேன் என்பது பற்றியும் நடிகை வனிதா விஜயகுமார் தனது யூடியூப் சேனலில் ரசிகர்களிடம் விளக்கியுள்ளார்.

  • Share this:
தனது 3-வது திருமணம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.

அந்த வீடியோவில் வனிதா விஜயகுமார் பேசியிருப்பதாவது, “எனக்கு 27-ம் தேதி திருமணம். ஏன் கொரோனா லாக்டவுனில் இந்த திருமணம் என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கலாம். டிசம்பரில் அவரை இயக்குநராக சந்தித்தேன். ஹாலிவுட், பாலிவுட்டிலும் நிறைய படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார். என்னிடம் கதை சொல்வதற்காக என்னை அணுகியிருந்தார். அது ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம். நான் அந்தக் கதையில் பாசிட்டிவ்வான கதாபாத்திரத்தை கேட்டேன். அவர் சிறந்த கற்பனை திறன் கொண்டவர். பிறகு என்னுடைய கதாபாத்திரம் குறித்து நண்பர்களிடம் கலந்தாலோசித்தேன். அவர்களும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கக் கூறினார்கள்.

பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி ஒருவாரத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் பெற்றிருந்தேன். அதற்கு பின்னர் ஊரடங்கு அறிவித்துவிட்டார்கள். அதனால் வீடியோக்கள் பதிவிட, எடுக்க கேமராமேன், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் இல்லை. அதனால் திணறினேன். அந்த சமயத்தில் பீட்டர் எனக்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பியிருந்தார். அவரிடம் நிலைமையைக் கூறி சேனலை இழுத்து தான் மூட வேண்டும் என்று வருத்தம் தெரிவித்தேன். அவர் என்னிடம் என்ன பிரச்னை என்று கேட்க உதவி செய்வதாக கூறினார். என் வீட்டுக்கு அருகில் அவர் இருப்பதால் வீட்டிற்கு வந்து வீடியோக்கள் தயார் செய்ய உதவினார். என் குழந்தைகளுக்கும் அறிமுகமானார். என்னிடம் பலரும் கேட்பீர்கள் யார் அந்த கேமராமேன் என்று. அவர் தான்(பீட்டர் பால்) அந்தக் கேமராமேன்.


பின்னர் ஒரு வேளையில் அவருடைய வேலைகளை கவனிப்பதற்காக கிளம்பி விட்டார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சரியாக வரவில்லை. பின்னர் நான் அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தேன். அவரும் வந்தார். அவருக்கும் என்னை பிடித்திருந்தது. அதை நான் உணர வேண்டும் என்பதற்காக காத்திருந்தார்.

Also Read : “என்னுடைய கனவு நனவாகியிருக்கிறது“ 3-வது திருமணம் குறித்து வனிதா ஓபன் டாக்..

பின்னர் ஐந்தாவது லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னால் என்னிடம் காதலை தெரிவித்தார். என் மகள் அதை ஏற்றுக் கொள்ளும்படி என்னிடம் கூறினார். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை தேவை. நாங்கள் திருமணம் செய்து சென்றுவிட்டால் உங்களைப் பற்றிய கவலையில் தான் இருப்போம். அதனால் இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எனது மகள் ஜோவிகா சொன்னார்.அப்போது தான் நான் யோசித்தேன். எனக்கென்று யாரும் இல்லை. பெற்றோர், குடும்பம் இல்லை. என் குழந்தைகளையும் அதிகம் கஷ்டப்படுத்த விரும்பவில்லை” என்று கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் வனிதா.

மேலும் பேசிய வனிதா, “எனக்கு பீட்டர் பாலை பிடித்திருந்தது. அதனால் அவருக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன். 40 வயது என்பது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். அது மிகவும் வித்தியாசமாக இருக்கும். எல்லோரும் என்னை ஸ்டார்ங் என நினைக்கிறார்கள். நான் சில விஷயங்களில் ஸ்ட்ராங் தான். ஆனால் எனக்கும் எமோஷன் இருக்கிறது. நான் உணர்வுரீதியாக பலவீனமானவள்.

ஜூன் 27-ம் தேதியை திருமண தேதியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால். நான் எது செய்வதாக இருந்தாலும் என்னுடைய அம்மாவிடம் கேட்பேன். என் அம்மாவிடம் ஏதாவது சொல்லுங்கள் என்று நினைத்தபடி இருந்தேன். 5 நிமிட இடைவெளிக்கு பின்னர் என்னுடைய மொபைலை எடுத்து பார்த்த போது ஜூன் 27 என்ற தேதி மட்டும் கண்ணில் பட்டது. அப்போது நான் அழுதுவிட்டேன். அவரும் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். என்ன ஆனது என்று விசாரித்தார். 27-ம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரிடம் சட்டென கூறினேன். மகிழ்ச்சியடைந்த அவர் அதற்கு ஏன் அழுகிறாய் என்றார். நான் என் அம்மாவிடம் சம்மதம் கேட்டு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் எனக்கு ஜூன் 27-ம் தேதி என் போனில் தெரிந்தது. அந்த தேதி தான் என்னுடைய அம்மா - அப்பாவுடைய கல்யாண நாள்.இதை நான் எப்போதும் கூறியதில்லை. உங்களிடம் தான் சொல்கிறேன் என்று பீட்டரிடம் கூறினேன்.

அம்மாவுக்கு அது ரொம்பவும் ஸ்பெஷலான நாள். அந்த நாளில் திருமணம் செய்து கொள்வதால் என் பெற்றோரின் ஆசிர்வாதம் கிடைக்கும் என நினைக்கிறேன்” இவ்வாறு வனிதா அந்த வீடியோவில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading