• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சினிமாவில் நல்லதையும் மோசமானதையும் சந்தித்தோம் - அஜித் பற்றி வனிதா ட்வீட்

சினிமாவில் நல்லதையும் மோசமானதையும் சந்தித்தோம் - அஜித் பற்றி வனிதா ட்வீட்

நடிகை வனிதா | அஜித்

நடிகை வனிதா | அஜித்

நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து 28 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து ரசிகர்களால் உருவாக்கப்பட்ட காமென் டிபியை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார் வனிதா விஜயகுமார்.

  • Share this:
    கடந்த மாதம் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி தன்னிடம் விவாகரத்து பெறாமல் இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார்.

    இதைத்தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் வனிதாவின் திருமணத்துக்கு எதிராக தங்களது விமர்சனத்தை முன் வைத்தனர். இதனால் ட்விட்டரில் இருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் சில தினங்களுக்கு பின்னர் மீண்டும் ட்விட்டரில் இணைந்தார்.

    அஜித் திரைத்துறைக்கு வந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் ஸ்பெஷல் காமென் டிபியை வெளியிட்டு கொண்டாடி வரும் நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த காமென் டிபியை பதிவிட்டு அஜித்தைப் பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில் வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது, “நம்ப முடியாதது. ஆனால் உண்மை. நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தான் சினிமாவில் நுழைந்தோம். சினிமாவில் நல்லதையும், மோசமானதையும் பார்த்தோம்.



    அஜித் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர். நான் சந்தித்த மிக எளிமையான, உண்மையான மனிதர்களில் நீங்கள் ஒருவர். கடவுள் உங்களுக்கும், ஷாலினிக்கும் அனைத்து சிறப்புகளையும் கொடுப்பார்” என்று தனது ட்வீட்டில் வனிதா குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: