தப்பா கமெண்ட் பண்றாங்க... கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா? விளாசிய வனிதா

திருமணம் குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் நடிகை வனிதா விஜயகுமார் விளக்கமளித்துள்ளார்.

தப்பா கமெண்ட் பண்றாங்க... கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா?  விளாசிய வனிதா
தனது மகளுடன் வனிதா விஜயகுமார்
  • Share this:
வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் முறையாக விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதாக, மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மேலும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பீட்டர் பால் ஒரு பெண் பித்தர், குடிகாரர் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் முதல்முறையாக மவுனம் கலைத்திருக்கும் வனிதா விஜயகுமார், “இது எல்லோருக்கும் நடக்கும் விஷயம் தான். என்னை தவறாக விமர்சிப்பவர்களை குறிப்பிட்டு பேசுகிறேன். எனக்கு பிரச்னைகள் இல்லை. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நிம்மதியாக இருக்கிறேன். உண்மையிலேயே நான் யாருடைய குடும்பத்தையும் கெடுக்கவில்லை. மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நேர்மையாகத் தான் இதை சொல்கிறேன். இதுவரை எந்த பொய்யையும் நான் உங்களிடம் சொன்னதில்லை.

கணவருடன் வனிதா விஜயகுமார்என்ன சொன்னாலும் அது உங்கள் விருப்பம். உங்கள் வீட்டில் ஒருவராக இதுவரை என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் என்னை பார்த்திருக்கிறீர்கள். இவ்வளவு வெளிப்படையாக நான் இருக்கும் போது, தவறு என்று தெரிந்து கொண்டே கிரிமினலாக ஒரு குற்றத்தை செய்யப் போகிறேன் என ஒரு உதாரணமாக வைத்துக் கொண்டால் கூட, அதை யூடியூபில் லைவ் போட்டு, திருமண நோட்டீஸ் அச்சிட்டு, அதை வீடியோவாக எடுத்து போடுவார்களா தவறு செய்பவர்களாக இருந்தால்?

சாதாரணமாக யார் வேண்டுமானாலும் எத்தனை புகார்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். காலம் காலமாக சினிமாக்காரர்களுக்கு நடப்பது தான்.

மேலும் படிக்க: 'இது உங்கள் டிவி ஷோ அல்ல... வேலைய பாருங்க...' லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடிஎனக்கு பீட்டர் பாலை 6 மாதங்களாக தெரியும். அவருடைய நண்பர்கள் எல்லாம் எனக்கு தெரியும். சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட பெரிய படங்களுக்கு விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். அந்த அளவுக்கு இந்த வயதில் என்னை எளிதாக ஏமாற்றிவிட முடியாது. நான் தெரிந்து கொண்ட வரையில் கிட்டத்தட்ட 7 வருடங்களாக தனியாக தான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 40 வயதாகி ஆண்களுக்கு திருமணமாகாமல் இருக்கிறதா?

பீட்டர் பாலின் குழந்தைகள் என்னுடைய குழந்தைகளோடு நண்பர்கள் இருக்கிறார்கள். பீட்டருக்கு மனைவி இருக்கிறார். ஏழரை வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பேசுவதற்கு எனக்கு உரிமை கிடையாது.

மேலும் படிக்க: 'ஆண்களை பெண் பித்தர்கள் என்று சொல்வது எளிதானது...' ரொமாண்டிக் போட்டோவை ஷேர் செய்த வனிதா

தன்னுடைய முன்னாள் மனைவியைப் பற்றி வெளியில் சொல்பவர்கள் சரியான ஆணாக இருக்கமாட்டார். அதனால் சில விஷயங்களை மட்டும் தான் என்னிடம் சொல்லியிருக்கிறார். பீட்டர் பால் - ஹெலன் இடையே பேச்சுவார்த்தை கிடையாது.

இப்போது கொரொனா காலத்தில் முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. குடும்ப நல நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் பீட்டர் பால் எலிசபெத் ஹெலன் குடும்பத்தாரிடம் பேசினார். அவர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

சிலர் விவாகரத்து தொடர்பான விவரம் புரியாமல் கமெண்ட் அடித்து வருகின்றனர். பீட்டர் பாலின் மனைவியுடன் ஏழரை வருடங்களாக தொடர்பிலேயே இல்லாமல் இப்போது ஒருவர் ஸ்பெஷல் ஹேஷ்டேக்கை உருவாக்கிக் கொண்டு வருகிறார். பீட்டர் பால் அவருடைய குழந்தைகளை பார்க்கவில்லை என்று கமெண்ட் அடிக்கிறார்கள். அவருடைய வங்கிக் கணக்கு விவரத்தை வெளியிடட்டுமா?

என்னுடைய குழந்தைகளை சிலர் குறை கூறுகிறார்கள். என்னுடைய குழந்தை அவர்கள். அவர்களது எதிர்காலம் எனக்குத் தெரியும். இதை திருமணம் என்று சொல்லலாம், நிச்சயதார்த்தம் என்று சொல்லலாம் எப்படி வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்.

4 வருடமாக கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஏன் அவர் எங்கிருக்கிறார் என்று கூடவா உங்களுக்குத் தெரியவில்லை. நான் தவறு செய்தால் கூட துணிச்சலாக தவறு செய்கிறேன் என்று கூறிவிட்டே செய்வேன்.

ஏன் என்னிடம் திருமணத்துக்கு முன்னர் ஹெலன் பேசியிருக்கலாமே அவரது மகனிடம் என்னுடைய நம்பர் இருக்கிறது. இப்போது நான் திருமணம் செய்துவிட்டதால் உங்களது கணவர் வேண்டுமா?

நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி நான் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய விரும்பவில்லை. கலாச்சாரம் பற்றி என்னிடம் பேசாதீர்கள். திருமணம் செய்யாமல் உறவில் இருப்பது கலாச்சாரமா? நம்முடைய கலாச்சாரத்தில் கடவுள் கூட இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்திருக்கிறார். இப்போது ஜூம் ஆப்-ல் திருமணம் நடக்கிறது. நாம் இப்போது வித்தியாசமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முகத்தை மூடிக் கொண்டு திருமணம் செய்வது தான் இந்து கலாச்சாரமா?பீட்டரை பெண்களுடன் தொடர்புபடுத்தி பேசுவது, குடிகாரர் என்று சொல்வது எல்லாம் தவறு. இப்போது பிக்பாஸ் 4 ஆரம்பிக்கவில்லை. இதேபோல் செய்தால் ஹெலன் அந்த சீசனில் போட்டியாளராகக் கூட ஆகலாம். இன்றைக்கு சீன் போடுபவர்களுக்காக நீங்கள் ஆயிரம் கமெண்ட் பதிவிடுகிறார்கள்.

இதனால் நான் பிரபலமாகித் தான் இருக்கிறேன். இதை வைத்து வெளிச்சம் தேடத் தேவையில்லை. எனக்கு பிரச்னை என்று சொன்னபோது யார் வந்தார்கள். இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். நீங்களெல்லாம் அனுதாபம் தெரிவிப்பதால் அவருக்கு கணவர் கிடைக்கப்போவதில்லை

எனக்கு குழந்தைகள் இருப்பதால், நான் சந்தோஷமாக இருக்கக் கூடாது, ஒரு ஆண் என்னுடன் இருக்கக் கூடாது என்பது தவறான கருத்து. அப்படி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading