சார் இந்த வனிதா இருக்கில்ல... பேஸ்புக்கில் கவனம் ஈர்க்கும் பதிவு

வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் குறித்து சமூகவலைதளத்தில் எழுந்திருக்கும் பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது ஷாஜஹான் என்பவரின் பதிவு.

சார் இந்த வனிதா இருக்கில்ல... பேஸ்புக்கில் கவனம் ஈர்க்கும் பதிவு
வனிதா - பீட்டர் பால் தம்பதி
  • Share this:
கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் நேற்று பீட்டர் பால் என்பவரை மணமுடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த முதல்நாளன்றே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தன் கணவர் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் ஹெலனின் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக வனிதா தெரிவித்திருக்கும் நிலையில், அவரது திருமணம் குறித்த விமர்சனங்களை பலரும் சமூகவலைதளத்தில் பேசுபொருளாக்கியுள்ளனர். இந்நிலையில் ஷாஜஹான் (புதியவன்) என்ற பெயரில் உள்ள ஃபேஸ்புக் ஐடியில் வனிதாவின் திருமணம் குறித்த பதிவு ஒன்றைக் காண முடிந்தது. உரையாடல் வடிவில் இருக்கும் இப்பதிவு வனிதாவின் திருமணத்தை குறைகூறுவோருக்கு நெத்தியடி பதிவாக அமைந்திருக்கிறது.

அந்த பதிவு இதோ:


— சார் இந்த வனிதா இருக்கில்லே?
— யார் அது வனிதா? பேஸ்புக்குல ஒரு வனிதாதான் ஞாபகமிருக்கு. கொஞ்சம் குறும்புக்காரப் பொண்ணு.
— அதில்ல சார். இது வேற வனிதா— சரி, அந்த வேற வனிதா யாரு?
— பிக் பாஸ்ல வந்துச்சு சார்.
— நீ பிக் பாஸ் பாத்தியா?
— ஓஓஓ... விடாம பாப்பேன் சார்.
— சரி, இப்போ அதுக்கு என்னாச்சு?
— இப்படிப் பண்ணிப்போடுச்சு சார்?
— எப்படிப் பண்ணிப்போடுச்சு?
— கல்யாணம் பண்ணிகிச்சு சார்
— நீ பிக்பாஸ்ல ரசிச்சு பாத்துகிட்டிருந்தது இப்போ கல்யாணம் பண்ணிகிச்சு... அதான் உன் பிரச்சினையா?
— அட அதில்ல சார்... மூணாம் கல்யாணம்
— சரி. அது மூணாம் கல்யாணம் பண்ணுச்சோ முப்பதாம் கல்யாணம் பண்ணுச்சோ... உனக்கென்ன பிரச்சினை
— என்ன சார்... ஏற்கெனவே ரெண்டு கல்யாணம் பண்ணி புள்ளைக கூட இருக்கு.
— இருக்கட்டுமே... அந்தப் புள்ளைக வந்து உன்கிட்டே அழுதுச்சா எங்கம்மா இப்படி மூணாம் கல்யாணம் பண்றாங்கன்னு?
— அதெல்லாம் இல்லை சார். அந்தப் புள்ளைகளே கல்யாணத்துல முன்னாடி நின்னுச்சு.
— பின்னே உனக்கு அதில் என்ன பிரச்சினை?
— அதில்லே சார். இதெல்லாம் நல்லாவா இருக்கு?
— அவங்களுக்கு நல்லா இருக்கு. அவங்க பண்ணிக்கிறாங்க. உன்கிட்டே ஏதாச்சும் உதவி கேட்டாங்களா?
— என்கிட்டே எதுக்கு சார் வர்றாங்க... இருந்தாலும் இந்த சமூக நாகரிகம்னு ஒண்ணு இருக்கில்லே?
— சரி, இதுக்கு முன்னாடி ரெண்டு கல்யாணம் பண்ணி, அது முறிஞ்சுபோச்சு. இப்போ மூணாவது கல்யாணம். அப்படித்தானே?
— ஆமா சார்
— இதுக்கு முன்னாடி நீ சொன்னியே அந்த சமூகம்தான் அந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சுதா? இல்லே சமூகத்தைக் கேட்டுதான் பண்ணுச்சா?
— இல்ல சார்... இருந்தாலும் இந்த வயசுல போய்
— எந்த வயசுல?
— நாப்பது வயசுல
— ஏன்... நாப்பது வயசுல கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?
— சட்டம் இல்லதான் சார். ஆனா புள்ளைகளுக்கே நாளைக்கு கல்யாணம் ஆகிற வயசுல இவங்க...
— ஏப்பா... அது அவங்களுக்கும் அவங்க புள்ளைகளுக்குமான பிரச்சினை. உனக்கு அதுல என்ன பாதிப்பு அதைச் சொல்லு.
— எனக்கு தனிப்பட்ட பாதிப்பு ஏதும் இல்ல சார். ஆனா சமூகத்துல...
— 25-30-35-40 வயசுலயும் எத்தனையோ ஆயிரம் பேருக்கு கல்யாணம் ஆகாம இருக்கு இதே சமூகத்தால. இந்த சமூகம் திணிச்சு வச்சிருக்கிற வரதட்சணை, சாதி, மதம்கிற தடைகளால. அதைப்பத்தி உன் சமூகம் ஏதாச்சும் செஞ்சிருக்குதா?
— அதில்ல சார். இன்னிக்கி இதுமாதிரில்லாம் நடக்கத் தொடங்கினா நாளைக்கு நம்ம புள்ளைக இதைப்பாத்து...
— அப்போ பிரச்சினை உனக்கு இல்லை. உன் புள்ளைகளுக்கு நாளைக்கு வரப்போற பிரச்சினை பத்தி கவலைப்படறே. அதானே?
— ஆமா சார்.
— சரி, உன் புள்ளைகளுக்கு நாளைக்கு கல்யாணம் செஞ்சு வச்சு, அதுகளுக்குள்ள டைவர்ஸே வராதுன்னு உறுதியா தெரியுமா?
— என்ன சார் இப்படி அபசகுனமா பேசறீங்க
— இல்லப்பா... நீதானே சொன்னே புள்ளைகளும் இதுமாதிரி ஆயிடுமோன்னு பயம்னு. அதான் கேட்டேன்.
— அப்பிடில்லாம் ஆக விட மாட்டேன் சார். என் புள்ளைகளை நல்லா வளத்து வைப்பேன்.
— உன் கேள்விகள்லியே தெரியுதே நீ நல்லா வளப்பேன்னு. சரி அதைவிடு. உன் புள்ளைகளைப் பத்தியும் கவலை இல்லே. பின்னே என்னய்யா பிரச்சினை உனக்கு?
— கல்யாணத்துல யாருமே மாஸ்க் போடல சார்...
— அப்பதே கேட்டா இந்த வயசுல கல்யாணமான்னு கேட்டே, இப்ப மாஸ்க் போடலேங்கிறே... பத்து நாள் முன்னாடி அதிமுக மினிஸ்டர் கல்யாணம் நடந்துச்சு. 50 பேர்தான் வரலாம்னு ரூல். ஆனா ஆயிரக்கணக்குல கூட்டம் இருந்துச்சு. அதைப்பத்தி ஏதாச்சும் பேசுனியா?
— அப்படியா சார்... அது தெரியாதே
— ஆமாமா... தெரிஞ்சாலும் தெரியாதுன்னு சொலலுவேன்னு எனக்குத் தெரியாதா... போகட்டும். நீ அந்தக் கல்யாணத்துக்குப் போயிருந்தியா?
— இல்ல சார். பேஸ்புக்குல போட்டோலதான் பாத்தேன்.
— என்ன ஒரு நூறு பேர் வந்திருப்பாங்களா?
— தெரியல சார். நான் பாத்தவரைக்கும் முப்பது நாப்பது பேர் இருக்கும்போலத் தெரிஞ்சுது. ஒரே மாதிரி டிரஸ் போட்டுகிட்டு ஆறேழு பொண்ணுங்க.
— சரி, கல்யாணத்துக்கு அலங்காரமா டிரஸ் போட்டுட்டு வந்தவங்க போட்டோவுக்காக மாஸ்க் கழட்டியிருக்கலாம். ஒரே மாதிரி டிரஸ் போட்டு, மாஸ்கும் போட்டா யார் எதுன்னு தெரியாமப் போயிடும்னும் கழட்டியிருக்கலாம். அது ஒரு பெரிய குத்தமா... குத்தமாவே இருந்தாலும் அதுக்கு கவர்மென்ட் நடவடிக்கை எடுக்கட்டும். நீ ஏன் புலம்பறே?
— நீங்க வேற... கொரோனா நேரத்துல பொண்ணும் மாப்பிள்ளையும் முத்தம் வேற குடுத்துகிட்டாங்க சார்!
— மாப்பிள்ளை பேர் என்ன?
— பீட்டர்னு பாத்தேன்.
— கிறித்துவ முறைக் கல்யாணத்துல முத்தம் குடுத்துக்குறது வழக்கமா இருக்கும். குடுத்துகிட்டாங்க. உனக்கு ஏன் குத்துது?
— அதுக்காக இப்பிடி பப்ளிக்காவா?
— ஏய்... கல்யாணம் பப்ளிக்கா நடக்கும்போது கல்யாணச் சடங்குக்காக ஒளிஞ்சுகிட்டு முத்தம் குடுக்கணுமா?
— இல்லே சார். கொரோனா நேரத்துல இப்பிடி முத்தம் குடுக்கலாமா? ரெண்டு பேருல யாராவது ஒருத்தருக்கு கொரோனா இருந்தா?
— அது அவங்க பிரச்சினை. சரி... நீ இந்த மூணு மாசமா பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிச்சுட்டு தனியாத்தான் இருக்கியா?
— எதுக்கு சார் ஊருக்கு அனுப்பணும்? கூடதான் இருக்கா...
— உனக்கோ உன் பொண்டாட்டிக்கோ கொரோனா இருந்தா?
— அதெல்லாம் இருக்காது சார்.
— அதேதான் அவங்களுக்கும் நம்பிக்கை. விடேன்.
— அது மட்டும் இல்லே சார். அந்த பீட்டருக்கும் ஏற்கெனவே கல்யாணமாகி மனைவியை விட்டுட்டுப் பிரிஞ்சிருக்காராம்.
— அப்படியா... சரி, அந்த பீட்டர் மனைவி வந்து உன்கிட்டே புலம்பினாங்களா?
— இல்ல சார்... விவாகரத்து செய்யாமலே கல்யாணம் செய்யறார்னு அவங்க போலீஸ்ல புகார் குடுத்திருக்காங்களாம்.
— அதை போலீஸ் பாத்துக்கும். இது சிவில் கேஸ்... கோர்ட்டு பாத்து முடிவு செய்யும். அது அவங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினை. உனக்கு என்ன பிரச்சினை? உனக்கு என்ன நட்டம்?
— எனக்கு எந்த நட்டமும் இல்ல சார். ஆனாலும் காலம் போற போக்கு சரியில்லே.
— காலமெல்லாம் சரியாத்தான் போயிட்டிருக்கு. நீதான் பின்னாடி போயிட்டிருக்கே. போய் புள்ளைகளை ஒழுங்கா நல்லா படிக்க வைக்கிற வழியப்பாரு. அதுகளாச்சும் உன்னை மாதிரி இல்லாம நல்லா வரட்டும்.
*
கடந்த ஆண்டும் இப்படித்தான் ஒரு பாடகியின் மகள் திருமணத்தை முன்னிட்டு பேஸ்புக்கில் பொங்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்தவர் குடும்ப விஷயங்களில் தலைவிடுவதை முதலில் நிறுத்துங்கள்.
பி.கு. - வனிதா யார்? இன்று வரை எனக்குத் தெரியாது. வனிதா விஜயகுமாரின் மகள் என்பதும் இதுவரை தெரியாது. வனிதா பிக் பாஸில் பங்கேற்றவர் என்பதும் தெரியாது. பிக் பாஸ் பார்த்தும் கிடையாது. காலையிலிருந்து பேஸ்புக் பதிவுகளிலிருந்து கிடைத்த தகவல்களிலிருந்து தொகுத்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading