• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • 'இன்னொருமுறை இந்த வார்த்தைகளை கேட்டேன், அவ்வளவு தான்' - வனிதாவின் அறிக்கை குறித்து ட்வீட் செய்த கஸ்தூரி..

'இன்னொருமுறை இந்த வார்த்தைகளை கேட்டேன், அவ்வளவு தான்' - வனிதாவின் அறிக்கை குறித்து ட்வீட் செய்த கஸ்தூரி..

வனிதாவின் அறிக்கை குறித்து ட்வீட் செய்த கஸ்தூரி

வனிதாவின் அறிக்கை குறித்து ட்வீட் செய்த கஸ்தூரி

நான் ஹானஸ்டா சொல்றேன், ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு நபர் என்கிற வார்த்தைகளை இன்னொரு முறை கேட்டேன், அவ்வளவு தான் என்று நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.

 • Share this:
  பீட்டர் பாலை பிரிந்தது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளதற்கு நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.

  கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் - வனிதா விஜயகுமார் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. இதையடுத்து வனிதா விஜயகுமார் - பீட்டர் பாலின் திருமணம் பற்றி சர்ச்சைகள் வெடித்தன. அப்போது தன்னை விமர்சித்த லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ரவீந்தர் சந்திரசேகரன் உள்ளிட்டோருக்கு அதிரடியாக பதிலளித்தார் வனிதா. பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதே வேளையில் தனது கணவர் குடிக்கு அடிமையானவர் என்றும், பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் இணைய ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார்.

  இந்நிலையில் சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடிய வனிதா, அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது கணவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ள வனிதா, அதில் எந்த இடத்திலும் பீட்டர் பாலின் பெயரையோ, அவரைப் பிரிந்ததை நேரடியாகவோ தெரிவிக்கவில்லை.

  வனிதா விஜயகுமார் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது, “நான் எதையும் மறைக்கவும் இல்லை. நான் என் குழந்தைகளுக்கும், வேலைக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல், பிரச்னைகளை திடமாக நின்று எதிர்கொண்டு வருகிறேன். என் வாழ்க்கையில் பிரச்னைகள் ஒன்றும் புதிதல்ல.வாழ்க்கை ஒரு பாடம். அதில் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்.. நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், பொய் செய்திகளை படித்துவிட்டு ஏதாவது ஒரு கதையைக் கட்டிக்கொண்டிருக்காதீர்கள். நான் எதையும் தவறாக செய்துவிடவில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு நான் அன்பு செலுத்தினேன். தற்போது, என் கனவுகளும், நம்பிக்கைகளும் நொறுங்கிய நிலையில் நிற்கிறேன்.

  இதுவும் கடந்துபோகும் என்று நம்புகிறேன். நான் யாரிடமும் எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. என் கணவர் மீது குறை சொல்லி அதன்மூலம் ஆதாயம் தேட முயற்சிக்க மாட்டேன். நான் முதிர்ச்சியடைந்திருக்கிறேன்.

  இது என் வாழ்க்கை; நானே எதிர்கொள்கிறேன். என் குழந்தைகளுக்காகவும், என்னை சுற்றி இருப்பவர்களையும் மனதிற்கொண்டு சரியான முடிவை எடுத்திருக்கிறேன். இறுதியாக, நான் இதுவரை எதையும் இழக்கவில்லை” இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

  இந்த அறிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். அதில், அவரது வாழ்க்கையை யாரும் ஊடக சர்க்கஸாக மாற்றவில்லை. அவள் சொந்தமாக உருவாக்கினாள். அவளுடைய சர்க்கஸ், அவளுடைய குரங்குகள். அவள் ரிங் மாஸ்டராக இருப்பாள் என்று நினைத்தாள், ஆனால் கோமாளியாக முடிந்தது.

  உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரைவேட்டாக இருக்க வேண்டுமெனில் , அதுகுறித்து சமூக வலைதளத்தில் பேசாதீர்கள். டெய்லி அப்டேட் கொடுப்பதுடன் இது போன்று அறிக்கை விடுவது ஏன்? என பதிவிட்டுள்ளார்.

  நான் ஹானஸ்டா சொல்றேன், ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு நபர் என்கிற வார்த்தைகளை இன்னொரு முறை கேட்டேன், அவ்வளவு தான் என்று பதிவிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: