பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சன் டிவியின் சந்திரலேகா தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்த வனிதா விஜயகுமார் பின்னர் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனிடையே தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
அந்த சேனலை தொடங்க உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்தார். அதைத்தொடர்ந்து தனது குழந்தைகளைக் கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்பும் அமைந்தது. ஆதம் தாசன் இயக்கத்தில் ஹீரோயினை மையப்படுத்திய அனல் காற்று என்ற படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதைத்தொடர்ந்து ஹரி நாடாருக்கு ஜோடியாக '2K அழகானது ஒரு காதல்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமான வனிதா விஜயகுமார் பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் ‘அந்தகன்’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் சமுத்திரகனிக்கு தான் ஜோடியாக நடிப்பதை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் வனிதா விஜயகுமார்.
இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் ‘அந்தகன்’ படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சிம்ரன், கார்த்திக், ப்ரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, சமுத்திரகனி வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.