நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான வனிதா விஜயகுமார், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார். அதில் மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்து வந்தார். அந்நிகழ்ச்சி முடிந்ததைத் தொடர்ந்து, விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 1-ல் கலந்துக் கொண்டு, டைட்டிலை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிஸியாகியிருக்கிறார் வனிதா. பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள ‘காற்று’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், நடைக்கடை மனிதர் ஹரி நாடாருடன் ‘2கே அழகானது காதல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே இன்னுமொரு முக்கியப் படத்தில் வனிதா நடிப்பதாக தெரிகிறது.
இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த், மற்றும் நடிகை சிம்ரன் நடிக்கிறார்கள். இதனை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்குகிறார். சில தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்ககளை பிரசாந்த் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் கமெண்ட் செய்த வனிதா, படக்குழுவினரோடு இணைய தான் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.