Home /News /entertainment /

சமந்தா ஸ்டைலை கையில் எடுத்த வனிதா விஜயகுமார்.. இது லிஸ்ட்லயே இல்லையே!

சமந்தா ஸ்டைலை கையில் எடுத்த வனிதா விஜயகுமார்.. இது லிஸ்ட்லயே இல்லையே!

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சையும் பரபரப்பும் தான் என்ற நிலையில் சமீபத்தில் பவர் ஸ்டாருடன் வனிதா திருமணக்கோலத்தில் இருந்த புகைப்படம் வைரலாக பரவியது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஐட்டம் டான்ஸ் இல்லாத திரைப்படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஐட்டம் டான்ஸ் அவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஐட்டம் டான்சுக்காக பிரத்தியேகமான கவர்ச்சி நடிகைகள் மற்றும் டான்சர்கள் இருந்தனர். கால மாற்றத்தில் இதற்கான முக்கியத்துவம் குறைந்து போனாலும், அவ்வப்போது ஏதேனும் ஒருசில திரைப்படத்தில் ஹீரோயின்களே ஐட்டம் டான்ஸ் ஆடி, ஹிட் அடித்த பாடல்களும் உள்ளன.

  சமீபத்தில் புஷ்பா திரைப்படத்திற்கு சமந்தா ஆடிய ஆட்டம், பட்டிதொட்டியெங்கும் வைரலாகி சூப்பர் ஹிட் ஆனது. மீண்டும் ஐட்டம் டான்ஸ் டிரெண்டு தொடங்குமா என்று சமீபத்தில் பலருக்கும் தோன்றியிருக்கும் நிலையில், சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் ஒரு ஐட்டம் டான்ஸ் நம்பருக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

  வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி, காதல் திருமணம் செய்து திரைத்துறையில் இருந்து விலகினார் வனிதா விஜயகுமார். ஆனால், சில ஆண்டுகளுக்குள்ளேயே பிரச்சனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவே இல்லை என்பது போல, வனிதா விஜயகுமர் பற்றிய தகவல்கள் ஏதேனும் வெளியாகிக் கொண்டே இருக்கும்.

  கணவருடன் விவாகரத்து, இரண்டாம் திருமணம் மற்றும் விவாகரத்து, தந்தையுடன் இணக்கமான உறவு இல்லை என்பதில் தொடங்கி பிக் பாஸ் வீட்டுக்குள் ‘வத்திக்குச்சி வனிதா’ என்று அவர் பேசியது எல்லாமே சர்ச்சையானது. பிக்பாஸ் சீசன் 3 ல் ஒரு போட்டியாளராக பங்கேற்றது இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மீண்டும் ஒரு ரவுண்டு வர உதவியாக இருந்தது என்றே கூறலாம்.

  இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஐஸ்வர்யாவை பார்த்து பொறாமை படும் மீனா!

  குக்கு வித் கோமாளி சீசன் 1ன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்கு பிறகு பீட்டர் பாலுடன் திருமணம் என்ற மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. இடையில் சமூகவளைத்தளங்களிலும் பலரோடு நேரடியாக பொறி பறக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  எவ்வளவு சர்ச்சைகள், கிசுகிசுக்கள், என்று ஏதாவது பிரச்சனைகள் இருந்துகொண்டே இருந்தாலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு, பிசியாகவே இருந்தார் வனிதா.

  வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சையும் பரபரப்பும் தான் என்ற நிலையில் சமீபத்தில் பவர் ஸ்டாருடன் வனிதா திருமணக்கோலத்தில் இருந்த புகைப்படம் வைரலாக பரவியது. அடுத்த திருமணமா என்று நெட்டிசன்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்

  சின்னத்திரையில் இருந்து மீண்டும் வெள்ளித்திரையில் பிஸியாக இருக்கும் வனிதா விஜயகுமார் பவர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒரு திரைப்பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டது. பவர் ஸ்டார் வனிதாவுக்கு ஜோடியாக ‘பிக்கப் டிராப்’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என்ற செய்தி பிறகுதான் வெளியானது.
  தற்போது வித்தியாசமான கெட்டப்பில் வனிதாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. ‘காத்து’ என்ற திரைப்படத்தில் ஒரு ஐட்டம் நம்பருக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார்.

  இதையும் படிங்க.. அமீரின் முத்தத்தால் பாவ்னிக்கு வந்த சிக்கல்.. சர்ச்சைக்கு முடிவு கட்ட நினைக்கும் ரசிகர்கள்!

  வித்தியாசமான தோற்றத்தில், மஞ்சள் உடையில், பச்சை நிற ஐலாஸ்களோடும், மெட்டல் ஜுவல்லரியோடும் வனிதாவின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சிலர் கேலியாக கமெண்ட் செய்தும், சிலர் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Vanitha Vijayakumar, Vijay tv

  அடுத்த செய்தி