Home /News /entertainment /

Exclusive: `என்னோட ஸ்வீட் ரிவெஞ்ச் இது!’ - மனம் திறந்த வனிதா விஜயகுமார்

Exclusive: `என்னோட ஸ்வீட் ரிவெஞ்ச் இது!’ - மனம் திறந்த வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் வனிதா விஜயகுமார்

Bigg boss vanitha vijayakumar : அவங்க பேச்ச அப்பவே கேட்டிருந்தா இந்நேரம் வேற லெவல் பிரபலமாகி இருப்பேன். பொருளாதார ரீதியாகவும் பேங்க் பேலன்ஸ், சொத்துபத்து ன்னு செட்டில் ஆகியிருப்பேன். இப்போ ஃபீல் பண்றேன். ..

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
வெள்ளித்திரை, பிஸ்னஸ், யூ டியூப் என பிஸியாக இயங்கி வருகிறார் வனிதா விஜயகுமார்.  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்  தமிழ் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார் வனிதா. மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசும் அவரின் இயல்பு, ஆரம்பத்தில் அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தேடி தந்தது. ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும், ``வனிதா இல்லாம போர் அடிக்குது’ என்று ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

பிக் பாஸ் எவிக்‌ஷனுக்கு பிறகு வனிதா யூ டியூப் சேனலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமையல், அழகு குறிப்புகள், சுற்றுலா வீடியோக்கள் என பதிவிட்டு வந்தார். இதற்கிடையில் சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் வந்து சென்றார்.

சமீபத்தில் சென்னையின் மையப்பகுதியில் தன் பெயரில் ஒரு டிசைனர் ஆடையகத்தையும் நிறுவினார். தற்போது திரைப்படங்களில் பிஸியாகிவிட்டார்.

`` யூ டியூப், பிஸ்னஸ், ஷுட்டிங்-ன்னு ஓடிக்கிட்டே இருக்கீங்க. எப்படி டைம் மேனேஜ் பண்றீங்க?’’ என்று வனிதாவிடம் கேட்டோம்..

டைம் மேனேஜ்மென்ட், டிப்ரஷன், ஷூட்டிங் என பல்வேறு விஷயங்களை நம்மிடம் கலகலப்பாக பகிர்ந்து கொண்டார் வனிதா..

Vanitha vijayakumar
வனிதா விஜயகுமார்


``நான் 80ஸ் கிட். பள்ளி பருவத்தில் ஸ்கூல் முடிச்சு வீட்டுக்கு வந்ததும் டியூஷன் போவோம். அப்புறம் டான்ஸ் கிளாஸ், பியானோ கிளாஸ், வைலின் கிளாஸ்னு நிறைய விஷயங்கள் பண்ணுவோம். என் அம்மா நாங்க எல்லா விஷயமும் கத்துக்கணும்னு ஆசைப்பட்டாங்க. நானும் பிரீத்தா-வும் சேர்ந்து தான் மியூசிக் கிளாஸ் போனோம். கார், ஆட்டோ, ரிக்‌ஷா-ன்னு அவசரத்துக்கு எது கிடைக்குதோ அதுல ஏறி போவோம். ரஜினி அங்கிள், சிவாஜி பெரியப்பா உள்ளிட்டோர் வீட்ல அடிக்கடி ஏதாச்சு ஃபன்க்ஷன் வைப்பாங்க. அதுலயும் தவறாம கலந்துப்போம். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, அந்த காலகட்டத்துல ஸ்கூல் போயிட்டு வர நேரம் போக கூடுதலா எவ்ளோ விஷயங்கள் பண்ணியிருக்கோம் பாருங்க. ஆனா இப்போ நேரமில்ல நேரமில்ல-ன்னு புலம்புறோம். அப்போ இருந்த ஒரு சுறுசுறுப்பு இன்றைய காலக்கட்டத்தில் இல்ல. எனக்காக கூட நான் நேரம் ஒதுக்குறது இல்ல.

என் அம்மா, ஸ்கின் கேர் பண்ணு,  ஆரோக்கியத்துல கவனம் செலுத்துன்னு திட்டுவாங்க. யூ டியூப் சேனல்ல நான் சொல்ற அழகு குறிப்புகள் என் அம்மா சொன்னது. அதையெல்லாம் ஃபாலோ பண்ண கூட எனக்கு நேரமில்ல. கடைசியா எப்போ பியூட்டி பார்லர் போனேன் கூட நியாபகம் இல்ல. இந்த லாக் டவுன், கொரோனா சூழல் நம்மள சோர்வாக்கிடுச்சு. ரிலாக்ஸ் மோடுக்கு வந்துட்டோம்.

Vanitha vijayakumar
வனிதா விஜயகுமார்


பிஸியா இருந்தாலும், என்னை சுத்தி இருக்கிறவங்கள நான் மகிழ்ச்சியா வெச்சிக்க முயற்சி பண்றேன். அது எனக்கு திருப்தி ஏற்படுத்துது. என் பிள்ளைங்கள, நண்பர்கள சந்தோஷமா பார்த்துறது ஒரு வகை மன அமைதிய தருது. யோகா, தியானம்-ன்னு எதுக்கும் நேரம் செலவிட்றதில்ல. என்னை பொறுத்தவரைக்கும் என் பிள்ளைங்கள நல்லபடியா பார்த்துக்குறது தான் பெஸ்ட் யோகா. அதுவே எனக்கு தேவையான பாசிடிவ் எனர்ஜிய கொடுக்குது. நெகட்டிவிட்டி பத்தி எப்போதும் கவல பட மாட்டேன்.  அதுமட்டுமில்லாம, என் லைஃப்ல இருக்க சில டிப்ரஷன  மறக்க என்னை நானே பிஸியா வெச்சிக்குறேன்.

யாருடைய ஆதரவும் இல்லாம சுயமா உழைச்சு முன்னேறனும்னு நினைக்கிறேன். என் குடும்பம், சகோதரிகள்னு யாருடைய ஆதரவையும் நான் இப்போ வரைக்கும் எதிர்பார்க்கல. சொந்த கால்ல நிக்குறேன். என்னை பாத்து தப்பா பேசுனவங்களுக்கு என் வெற்றிதான் நான் கொடுக்க போற ஸ்வீட் ரிவெஞ்ச். அதனால தான் ஓய்வில்லாம ஓடுறேன். பலர் என் வாழ்க்கைல பிரச்சனை இருக்கு, மகிழ்ச்சியா இல்லைன்னு நினைக்குறாங்க. உண்மைய சொல்லனும்னா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், கணவன், குடும்பம்னு இருந்தா தான் சந்தோஷமான வாழ்க்கை அப்படின்னு எதுவும் இல்ல. நான் என் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழுறேன். என்னை நானே மகிழ்ச்சியா வெச்சிக்குறேன்.

vanitha vijayakumar
வனிதா விஜயகுமார்


என்னோட டீன் ஏஜ்ல இருந்தே என் அம்மா என்னை நடிக்க சொல்லி  அட்வைஸ் பண்ணுவாங்க. `கேரியர் முக்கியம். இப்போ விட்ட எப்பவுமே நடிக்க முடியாது’-ன்னு அட்வைஸ் பண்ணுவாங்க. அவங்க பேச்ச அப்பவே கேட்டிருந்தா இந்நேரம் வேற லெவல் பிரபலமாகி இருப்பேன். பொருளாதார ரீதியாகவும் பேங்க் பேலன்ஸ், சொத்துபத்து ன்னு செட்டில் ஆகியிருப்பேன். இப்போ ஃபீல் பண்றேன். 20 வயசுலயே கல்யாணம் குடும்பம்னு செட்டில் ஆகி, நடிப்பு துறையில் கவனம் செலுத்தாம விட்டுட்டேன். விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. நல்ல கதாபாத்திரங்கள்ல கமிட் ஆகி நடிச்சிருக்கேன். படங்கள் வெளியானதும் கண்டிப்பா மக்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன். என் அம்மா அப்பா எப்படி குணசித்திர கதாபாத்திரங்கள்ல நடிச்சு பேர் வாங்கினாங்களோ அதே மாதிரி நானும் சாதிப்பேன். ’ என்றவரிடம் அவரின் ‘தில்லு இருந்தா போராடு’ படம் குறித்து கேட்டோம்..

``இந்த படத்துல பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற கேரக்டரில் நடிக்குறேன். என் அப்பா நடிச்ச நாட்டாமை பஞ்சாயத்து காட்சி எப்படி ஹிட் ஆச்சோ அதே மாதிரி என்னோட கேரக்டரும் ரசிகர்கள் மனதில் பதியும். இந்த படம் மட்டுமில்ல, நான் கமிட் ஆகியிருக்க கேரக்டர்கள் எல்லாமே வித்யாசமா இருக்கும். இந்த படத்துக்கான ஷூட்டிங் முடிஞ்சு, அவுட் பார்த்துட்டு தயாரிப்பாளர், இயக்குநர் செம ஹேப்பி. ’’ என்றார் உற்சாகத்துடன்.

இதையும் படிங்க.. மைனா நந்தினி பெரிய வீடு வாங்கிட்டாரா? - உண்மை என்ன

வனிதாவிடம் ``அடுத்து கைவசம் என்னென்ன படங்கள் இருக்கு’’ என்று கேட்டோம்..

``தற்போது `பிக் அப்’ எனும் படத்தில் பவர் ஸ்டாருடன் நடிச்சிட்டு இருக்கேன். பவர்ஸ்டாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால ஷீட்டிங் நிறுத்தப்பட்டுச்சு. இப்போ திரும்பவும் தயாரிப்பு வேலைகள் தொடங்கிடுச்சு. மேலும் இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நாயகனாக நடிக்கும் `அந்தகன்’ எனும் திரில்லர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறேன். ’நீயா நானா’ கோபிநாத் நடிப்பில் உருவாகிட்டு இருக்குற படத்துல லீட் ரோலில் நடிச்சிட்டு இருக்கேன்.. குக்கிங், டான்ஸ், நடிப்புன்னு கவனம் செலுத்திட்டு இருந்த எனக்கு பாட்டு பாடவும் வாய்ப்பு கொடுத்தாங்க. `பிக் அப்’ படத்துக்காக ஒரு ஜாலியான பாட்டு பாடியிருக்கேன். இது பெண்களுக்கான பாடலா இருக்கும். இந்த பாட்டுக்கு பேரரசு லிரிக்ஸ் எழுதியிருக்கார். கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்புறேன்’’ என்றார் மகிழ்ச்சியுடன்!உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: Actress Vanitha, Bigg Boss Tamil, Interview, Tamil Cinema, Trending Videos, TV Serial, Vanitha Vijayakumar

அடுத்த செய்தி