பாஜகவில் இணைந்து அதிரடி அரசியல் என்ட்ரி கொடுக்கும் வனிதா விஜயகுமார்?

நாளை தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார், நாளை மறுநாள் பத்திரிகையாளர்களை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜகவில் இணைந்து அதிரடி அரசியல் என்ட்ரி கொடுக்கும் வனிதா விஜயகுமார்?
நடிகை வனிதா
  • Share this:
நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா விஜயகுமார் சந்திரலேகா, மாணிக்கம், ஹிட்லர் பிரதர்ஸ் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவருக்கு பிக்பாஸ் 3-வது சீசன் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்தார். அப்போது அவருக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாகக் கூறி சமீபத்தில் பிரிந்தார்.


பீட்டர்பால் உடனான பிரிவு மற்றும் சமூகவலைதளத்தில் எழும் விமர்சனங்கள் தன்னை பாதிக்கும் என்பதால் சிறிது காலம் கழித்து சோஷியல் மீடியா பக்கம் திரும்புவேன் என்று கூறியிருந்த வனிதா விஜயகுமார் தற்போது பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நாளை தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார், நாளை மறுநாள் பத்திரிகையாளர்களை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: காதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம் - வாழ்த்தும் ரசிகர்கள்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்ததை அடுத்து வனிதா விஜயகுமாரும் பாஜகவில் இணைந்து அரசியல் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஏற்கெனவே வனிதாவின் தந்தை விஜயகுமார் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading