முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல நடிகை தனது கசின் சிஸ்டர் என்பதை 40 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறிந்த வனிதா விஜயகுமார்!

பிரபல நடிகை தனது கசின் சிஸ்டர் என்பதை 40 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறிந்த வனிதா விஜயகுமார்!

வனிதா விஜயகுமார் - விமலா ராமன்

வனிதா விஜயகுமார் - விமலா ராமன்

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பிறகு, எனது அம்மாவின் குடும்ப வழியில் நீண்ட காலம் தெரியாத ஒரு உறவினர் இருப்பதை அறிகிறேன்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

40 வருடங்கள் கழித்து தனது கசின் சிஸ்டரை கண்டு பிடித்ததாக நடிகை வனிதா விஜயகுமார் இன்ஸ்டகிராமில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  

பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் நடிகை வனிதா விஜயகுமார். இதில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பட்டு, அதிலிருந்து விலகினார். பின்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வனிதா, பாதியிலேயே அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

மறுபுறம் மூன்றாவது கணவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்த அவர், படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், வசந்தபாலனின் புதிய படம் உள்ளிட்டப் படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு வனிதா விஜயகுமார் என்ற யூ-ட்யூப் சேனலை நடத்தி வரும் வனிதா, பெண்களுக்கான ஆடை, அலங்காரம், மேக்கப் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கடையையும் நடத்தி வருகிறார்.


இந்நிலையில் நடிகை விமலா ராமன் தனது அம்மா வழி உறவினர் என்பது 40 வருடங்களுக்குப் பிறகு தெரிய வந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் வனிதா. விமலாவுடன் எடுத்துக் கொண்ட படத்துடன், “ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பிறகு, எனது அம்மாவின் குடும்ப வழியில் நீண்ட காலம் தெரியாத ஒரு உறவினர் இருப்பதை அறிகிறேன். அதன்படி விமலா ராமனை அறிமுகப்படுத்துகிறேன், எனது இனிமையான கசின் சிஸ்டர் மற்றும் சர் சி.டி. முத்துசாமி ஐயரின் பெருமைமிக்க கொள்ளுப் பேத்தி. ஆங்கிலேயர்களால் முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சிலை உயர்ந்து நிற்கிறது” என்று இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இதேபோல் வனிதா, அவர் குடும்பத்துடன் விரைவில் இணைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் அவரது ஃபாலோயர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vanitha Vijayakumar