'இது உங்கள் டிவி ஷோ அல்ல... வேலைய பாருங்க...' லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி

வனிதா விஜயகுமார் - லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்தடுத்து ட்வீட் செய்ததால் சமூகவலைதளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

'இது உங்கள் டிவி ஷோ அல்ல... வேலைய பாருங்க...' லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி
லட்சுமி ராமகிருஷ்ணன் | வனிதா விஜயகுமார்
  • Share this:
வனிதா விஜயகுமார் திருமணத்தை அடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் முறையாக விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மேலும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பீட்டர் பால் ஒரு பெண் பித்தர், குடிகாரர் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த வனிதா விஜயகுமார், சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், பணத்திற்காக அவர் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் கொடுத்திருக்கும் செய்தியை அறிந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டர் பதிவின் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அதில், பீட்டர்பாலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் விவாகரத்தாகவில்லை. படிப்பும் அனுபவமும் கொண்டவர்கள் எப்படி இந்த தவறைச் செய்ய முடியும். அதிர்ச்சியடைந்துள்ளேன். வனிதா - பீட்டர் பால் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை. திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என்று நினைத்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவுக்கு பதிலளித்திருக்கும் வனிதா விஜயகுமார், “தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம்


மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

படிக்க: 'நான் ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன்' - கொதித்தெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்

வனிதாவின் பதில்களுக்கு பின்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், வனிதா திருமணத்தை பற்றி பேசிக்கொள்வதை நிறுத்திக் கொள்வோமா? முறைப்படி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணங்களைக் குறித்த எனது கருத்தை பதிவிட்டேன். சமீபத்திய தந்தை - மரணம் குறித்து நான் கருத்து வெளிப்படுத்தும் போது இவ்வளவு எதிர்வினைகள் வருவதில்லை” என்றார்.

வனிதா விஜயகுமார் - லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்தடுத்து ட்வீட் செய்ததால் சமூகவலைதளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading