• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காதல் வலிமையானது... அதிசயம் நடக்கும் - வனிதா விஜயகுமார் உருக்கம்

காதல் வலிமையானது... அதிசயம் நடக்கும் - வனிதா விஜயகுமார் உருக்கம்

கணவருடன் வனிதா விஜயகுமார்

கணவருடன் வனிதா விஜயகுமார்

பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வனிதா விஜயகுமார் தனது சமூகவலைதள பக்கத்தில் உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் கடந்த ஜூன் 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக திருமணம் நடைபெற்றது. அன்றையநாளில் பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் கொடுத்த புகாரில் அத்திருமணம் சர்ச்சையானது.

    தனது திருமணத்தை விமர்சித்தவர்களுக்கு அதிரடியாக பதில் கொடுத்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் மற்றும் தனது மகள்களுடன் போரூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். நேற்றைய முன் தினம் பீட்டர்பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதனால் உடைந்து போன வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்க பதிவில், “நேற்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் எங்களுக்கு இந்த சோதனையைக் கொடுத்து வருகிறார். எங்கள் காதல் வலிமையானது. நிச்சயம் அதிசயம் நடக்கும். அவருக்காக நானும் எனக்காக அவரும் எப்போதும் இருப்போம்.



    திருமணம் என்பது சட்டரீதியான ஒரு ஒப்பந்தம் மட்டுமல்ல. அது உணர்வுப்பூர்வமானது. உனக்கு நான் எனக்கு நீ என இரண்டு இதயங்கள் ஒன்றிணையும் விஷயம். சிலருக்கு வேண்டுமானால் திருமணம் மற்றும் விவாகரத்து வெறும் காகிதமாக இருக்கலாம்.



    எங்கள் மீது அக்கறை செலுத்தி நலம் விசாரித்து குறுஞ்செய்தி அனுப்பிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. வாழ்க்கை மிகவும் குறுகியது, கணிக்கமுடியாதது. வாழு, வாழ விடு” இவ்வாறு வனிதா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: