’இதுவும் கடந்து போகும்..’ - பீட்டர் பாலை பிரிந்தது குறித்து வனிதா விஜயகுமார் உருக்கமான அறிக்கை..

பீட்டர் பாலை பிரிந்தது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

’இதுவும் கடந்து போகும்..’ - பீட்டர் பாலை பிரிந்தது குறித்து வனிதா விஜயகுமார் உருக்கமான அறிக்கை..
வனிதா - பீட்டர் பால்
  • Share this:
கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் - வனிதா விஜயகுமார் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

அதே வேளையில் தனது கணவர் குடிக்கு அடிமையானவர் என்றும், பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் இணைய ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார். இதையடுத்து வனிதா விஜயகுமார் - பீட்டர் பாலின் திருமணம் பற்றி சர்ச்சைகள் வெடித்தன. அப்போது தன்னை விமர்சித்த லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ரவீந்தர் சந்திரசேகரன் உள்ளிட்டோருக்கு அதிரடியாக பதிலளித்தார் வனிதா.

சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடிய வனிதா, அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது கணவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.


பீட்டர்பால் - வனிதா விஜயகுமார்


இந்நிலையில் இதுகுறித்து உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ள வனிதா, அதில் எந்த இடத்திலும் பீட்டர் பாலின் பெயரையோ, அவரைப் பிரிந்ததை நேரடியாகவோ தெரிவிக்கவில்லை.

வனிதா விஜயகுமார் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது, “நான் எதையும் மறைக்கவும் இல்லை. நான் என் குழந்தைகளுக்கும், வேலைக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல், பிரச்னைகளை திடமாக நின்று எதிர்கொண்டு வருகிறேன். என் வாழ்க்கையில் பிரச்னைகள் ஒன்றும் புதிதல்ல.வாழ்க்கை ஒரு பாடம். அதில் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்.. நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், பொய் செய்திகளை படித்துவிட்டு ஏதாவது ஒரு கதையைக் கட்டிக்கொண்டிருக்காதீர்கள். நான் எதையும் தவறாக செய்துவிடவில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு நான் அன்பு செலுத்தினேன். தற்போது, என் கனவுகளும், நம்பிக்கைகளும் நொறுங்கிய நிலையில் நிற்கிறேன்.

இதுவும் கடந்துபோகும் என்று நம்புகிறேன். நான் யாரிடமும் எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. என் கணவர் மீது குறை சொல்லி அதன்மூலம் ஆதாயம் தேட முயற்சிக்க மாட்டேன். நான் முதிர்ச்சியடைந்திருக்கிறேன்.

இது என் வாழ்க்கை; நானே எதிர்கொள்கிறேன். என் குழந்தைகளுக்காகவும், என்னை சுற்றி இருப்பவர்களையும் மனதிற்கொண்டு சரியான முடிவை எடுத்திருக்கிறேன். இறுதியாக, நான் இதுவரை எதையும் இழக்கவில்லை” இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published: October 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading