அவதூறு பேச்சு - வனிதா விஜயகுமார் போலீசில் புகார்

சமூகவலைதளத்தில் தன்னைப் பற்றி அவதூறு பேசி வரும் பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை வனிதா விஜயகுமார் போலீசில் புகாரளித்துள்ளார்.

அவதூறு பேச்சு - வனிதா விஜயகுமார் போலீசில் புகார்
தனது மகளுடன் வனிதா விஜயகுமார்
  • Share this:
நடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் கடந்த மாதம் 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் தனது கணவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதைத்தொடர்ந்து பீட்டர் பால் - வனிதா விஜயகுமார் திருமணம் பற்றி எலிசபெத் ஹெலன் வைத்த குற்றச்சாட்டுகளால், பல்வேறு தரப்பினரும் சமூகவலைதளங்களில் விமர்சனங்களை முன் வைத்து வந்தனர். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு அச்சப்படாமல் துணிவாக தனது யூடியூப் சேனலில் வனிதா விஜயகுமார் பதிலளித்து வந்தார்.

இந்நிலையில் சூர்யா தேவி என்ற பெண் யூடியூபில் தன்னைப் பற்றியும் திருமணம் குறித்தும் அவதூறாகப் பேசிவருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் வனிதா விஜயகுமார் புகாரளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
View this post on Instagram
 

🙄


A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on


மகளிடம் அன்பை பொழியும் பீட்டர் பால்...! வனிதா வெளியிட்ட எமோஷனல் போட்டோஸ்

சூர்யா தேவி என்ற பெண், ஏற்கெனவே தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறு பேசியதற்காக சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளதாகவும் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading