• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • லட்சுமி ராமகிருஷ்ணன் கமெண்ட்டிற்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்

லட்சுமி ராமகிருஷ்ணன் கமெண்ட்டிற்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்

லட்சுமி ராமகிருஷ்ணன் - வனிதா விஜயகுமார்

லட்சுமி ராமகிருஷ்ணன் - வனிதா விஜயகுமார்

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து, தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

  • Share this:
    தனது சமீபத்திய படத்திற்கு கமெண்ட் அடித்த லட்சுமி ராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கியிருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.

    கடந்த வருடம் நடிகை வனிதா விஜயகுமார், சினிமா டெக்னீஷியன் பீட்டர் பாலை திருமணம் செய்துக் கொண்டார். அப்போது இந்த விஷயம் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. காரணம், வனிதா ஏற்கனவே 2 முறை திருமண முறிவானவர். முதல் மனைவியிடம் சட்டபூர்வமாக விவகரத்து பெறாமல், வனிதாவை திருமணம் செய்திருந்தார் பீட்டர் பால். இதனால் இவர்களின் விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.

    பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி எலிசபெத்தும் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். இதற்கிடையே வனிதா - பீட்டர் பால் திருமணம் குறித்து பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க, ஒரு கட்டத்தில் அது விபரீதமானது. குறிப்பாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்த, லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில், வாடி போடி என்று அழைத்தார் வனிதா விஜயகுமார். இதையடுத்து தன்னை அவதூறாக பேசி விட்டார் எனக்கூறி, வனிதாவிடம் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதே போல தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து, தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.



    சமீபத்தில் நடிகை வனிதா, பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன்னிடன் கருத்து கேட்க, அதற்கு ’இதனைப் பார்க்கும்போது மிகவும் காமெடியாக இருக்கிறது’ என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ’அருவருப்பான விஷமத்தன்மை கொண்ட இந்த லேடியை நான் நேசிக்கிறன். இவர் என்னுடைய ரகசிய ரசிகையாக இருந்து வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: