• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பீட்டர்பால் உடன் மீண்டும் சமரசமா? - உண்மையை உடைத்த வனிதா விஜயகுமார்

பீட்டர்பால் உடன் மீண்டும் சமரசமா? - உண்மையை உடைத்த வனிதா விஜயகுமார்

பீட்டர்பால் - வனிதா விஜயகுமார்

பீட்டர்பால் - வனிதா விஜயகுமார்

பீட்டர் பால் உடன் மீண்டும் சமரசம் செய்ய உள்ளதாக வெளியான தகவலுக்கு நடிகை வனிதா விஜயகுமார் பதிலளித்துள்ளார்.

  • Share this:
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து வனிதா விஜயகுமார் - பீட்டர் பாலின் திருமணம் பற்றி சர்ச்சைகள் வெடித்தன. ஆனால் அத்தனை சர்ச்சைகளுக்கும் அதிரடியாக பதிலளித்து வந்த வனிதா விஜயகுமார், சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும், இதய பிரச்னை வந்த பின்னரும் சிகரெட் மற்றும் மதுவுக்கு பீட்டார் பால் அடிமையாக இருப்பதாகக் கூறி இதுதான் தங்களது பிரிவுக்குக் காரணம் என்று வீடியோ வடிவில் நீண்ட விளக்கமளித்தார் வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் பீட்டர் பால் உடன் வனிதா இணைந்து வாழ முயன்றதாகவும், ஆனால் பீட்டர்பால் அதை விரும்பவில்லை என்றும் தகவல்கள் கசிந்தன. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் வனிதா விஜயகுமார், “நான் மீண்டும் இணைந்து வாழ முயன்றதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும், அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. மாயையிலிருந்து வெளியே வாருங்கள். என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான் தான் யாரையாவது நிராகரித்திருக்கிறேன்.

பிரிந்தது குறித்து நான் கடைசியாக வீடியோ வெளியிட்டதற்கு பிறகு நாங்கள் இருவரும் பேசினோம். அவர் முதிர்ச்சியடைந்தவர். அவரது முடிவை எடுத்துவிட்டார். அந்த முடிவோடு என்னால் வாழ முடியாது. ஆனால் நான் சொன்னது போல அவரது முன்னாள் மனைவி, குழந்தைகள் என யாருமே வேண்டாம் என்று சொன்னதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது உங்களுக்கு உண்மை தெரியும். நான் முட்டாளாகவும், அப்பாவியாகவும் இருந்ததால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.



காதலில் என்னுடைய அதிர்ஷ்டம் என்ன என்பதை நான் புரிந்து அதை ஏற்றுக் கொண்டுவிட்டேன். எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். எனவே இதற்கு மேல் யூகிப்பதை, விவாதம் செய்வதை நிறுத்துங்கள்.

அவரோடு எனக்கு சட்டரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ எந்த ஒரு உறவும் இல்லை. நான் என் வழியில் என் வலியைக் கையாள்கிறேன். அத்தனை அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. பாசிட்டிவ்வான சிந்தனையுடன் என் பயணம் தொடரும்” இவ்வாறு வனிதா விஜயகுமார் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: