• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு நான் சொல்லிக்கொள்வது.. வனிதாவின் உருக்கமான வீடியோ..

பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு நான் சொல்லிக்கொள்வது.. வனிதாவின் உருக்கமான வீடியோ..

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

பீட்டர் பால் உடனான பிரச்னை குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருக்கும் வனிதா விஜயகுமார் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனையும் சாடியுள்ளார்.

  • Share this:
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் உடன் திருமணம் செய்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதே வேளையில் தனது கணவர் குடிக்கு அடிமையானவர் என்றும், பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் இணைய ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார். இதையடுத்து வனிதா விஜயகுமார் - பீட்டர் பாலின் திருமணம் பற்றி சர்ச்சைகள் வெடித்தன.

சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடிய வனிதா, அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனது கணவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின. பீட்டர் பால் உடனான பிரச்னை குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருக்கும் வனிதா விஜயகுமார் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனையும் சாடியுள்ளார்.

எலிசபெத் ஹெலன் குறித்து வனிதா பேசியதாவது, “அவருக்கு ஏதாவது ஒன்று நடந்தால் என்னை அவர் மனைவி பழி சொல்வார். ஆனால் எலிசபெத் பீட்டரைப் பற்றி சொன்ன பல விஷயங்கள் இப்போது உண்மை என தெரிகிறது. இந்த ஒரு வருடம் அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்ததற்கும், நான் அவரை சந்தித்ததற்கும் எல்லாமே ஒரு காரணத்துக்காகத்தான். அப்படித் தான் வாழ்க்கையை நான் எடுத்துச் சென்றிருக்கிறேன்.

நான் அவர் உயிரைக் காப்பாற்றுவதற்காக வந்திருக்கலாம். நான் இல்லையென்றால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று யார் சிகிச்சைக்கு செலவு செய்திருப்பார்கள் என்பதை நினைத்துக் கூடப்பார்க்க முடியாது. அவர் தனியாக இருந்து மாரடைப்பு வந்திருந்தால் அந்த வலியிலேயே அவர் இல்லாமல் கூட போயிருப்பார். எலிசபெத்துக்கும் நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் பார்த்த அனுபவித்த வலியை முழுவதுமாக நான் உணரவில்லை. ஆனால் 10 சதவிகிதம் என்னவென்று என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

பீட்டர் பால் விஷயத்தில் நீங்கள் என்ன உணர்ந்திருப்பீர்கள் என எனக்கு இப்போது தெரிகிறது. என்னை நீங்கள் வில்லனாக்கியது மட்டுமே எனக்கு உங்கள் மேல் உள்ள கோபம். நான் உங்கள் வாழ்க்கையின் குறுக்கே வரவில்லை. உங்கள் கணவரை உங்களிடமிருந்து அபகரிக்கவில்லை. அவரை நான் தடுத்து நிறுத்தி வைக்கவும் இல்லை. அது உங்கள் மனசாட்சிக்கு நன்கு தெரியும்.

நீங்கள் அவர் ஹாஸ்பிடலில் இருந்தபோது எத்தனை முறை போன் செய்திருப்பேன். உங்களுடைய மகனுக்கு மெசேஜ் செய்திருப்பேன். முடியாத நேரத்தில் குழந்தைகள் வந்து அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து தொடர்பு கொண்டேன். ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை.

மீடியாக்களில் பேட்டி கொடுக்கும் போது மட்டும் என்னைத் தாக்கி பேசுகிறீர்கள். எனக்கும் உங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. உங்களின் மீது எனக்கு எந்தக் கோபமும் கிடையாது. உங்களை நான் காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால் அது என் தவறல்ல. ஏனெனில் உங்களிடம் இருந்து நான் எதையும் திருடவில்லை. இரண்டாவது பீட்டர் உங்களுக்கு வேண்டும் என்று நினைத்திருந்தால் நீங்கள் நிறைய விஷயங்கள் செய்திருக்கலாம்.

இந்த 6 மாதங்களில் என்னைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். மருத்துவமனை வந்திருக்கலாம். மருத்துவமனையில் பீட்டரை அனுமதித்திருந்த போது சட்டப்பூர்வமாக என்னால் கையெழுத்து போட முடியாது என்பதால் நான் வடபழனி காவல்நிலையத்துக்கு போன் செய்து போலீசிடம் தெரிவித்தேன். சட்டப்பூர்வமாக என்னால் மனைவி என்று சொல்லி கையெழுத்திட முடியாது.

பின்னர் மருத்துவமனைக்கு பிரச்னை வந்துவிடும் என்று பயப்பட்டு மனைவியிடம் ஒரு ‘நோ அப்ஜக்‌ஷன்’ வாங்க வேண்டும் என்றார்கள். உங்களை சிகிச்சைக்கான பணம் செலுத்த சொல்லவில்லை. உங்களது கணவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நான் நின்ற அளவுக்கு நீங்கள் நிற்கவில்லை. உங்களுக்கு ஆயிரம் கோபம் அவர் மீது இருக்கலாம். உங்கள் கணவர் குழந்தைகளுக்கு தந்தை என்று சொன்னீர்கள். ஆனால் நீங்கள் எதுவும் செய்யவில்லை.

மனைவி என்றால் நிற்க வேண்டும். இல்லையென்றால் விட்டுவிட்டு ஓடிவிடுங்கள். விவாகரத்து அல்லது எதையோ செய்து கொள்ளுங்கள். அதற்காக அவரையும் என்னையும் வாழவிடாமல் செய்து ஊடகங்களில் பேசி மன அழுத்தத்தை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் அவருக்கு மாரடைப்பு வந்திருக்காது. இவ்வளவு சீக்கிரம் இது எல்லாம் நடந்திருக்காது.

உங்களுடைய வயிற்றெரிச்சலை நான் கொட்டிக் கொள்ளவில்லை. நீங்கள் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். அவர் தனியாக இருந்தார். இதை நான் பதிவு செய்யக் காரணம் உங்களால் நான் காயப்படுத்தப்பட்டிருக்கிறேன்.

உண்மையிலேயே உங்கள் கணவர் வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் அவருடன் சென்று வாழுங்கள். எந்த விதத்திலும் நான் தடுக்க மாட்டேன். ஏனெனில் நான் நடுவில் வந்தேன். ஒரு காரணத்துக்காக வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்களால் முடியாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். நடுவிலேயே விலகிச் செல்கிறேன்” இவ்வாறு வனிதா தெரிவித்துள்ளார்.பீட்டர் பால் உடனான பிரச்னை குறித்து விளக்கமளித்து வனிதா பதிவிட்டிருக்கும் இந்த வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: