சூர்யா தேவி கைது - அடுத்தகட்டமாக கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதா போலீசில் புகார்

கஸ்தூரி, லட்சுமிராமகிருஷ்ண, நாஞ்சில் விஜயன் ஆகியோர் தன்னைப்பற்றி அவதூறு பேசிவருவதாக வனிதா விஜயகுமார் போலீசில் புகாரளித்துள்ளார்.

சூர்யா தேவி கைது - அடுத்தகட்டமாக கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதா போலீசில் புகார்
வனிதா | கஸ்தூரி
  • Share this:
நடிகை வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக நடந்தது. இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார்.

இதைத்தொடர்ந்து வனிதா மற்றும் பீட்டர் பால் மீது குற்றம்சாட்டி எலிசபெத் ஹெலன் பல இணைய ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இதனால் இந்தவிவகாரம் சமூகவலைதளவாசிகள் மத்தியில் பேசுபொருளானது. இதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர், சூர்யாதேவி உள்ளிட்டோர் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

தன்னைப்ப ற்றிய விமர்சனங்களுக்கு அடிக்கடி ட்விட்டரில் பதிலளித்து வந்த வனிதா விஜயகுமார், கஸ்தூரியின் ட்விட்டர் பதிவுகளுக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்திருந்தார். இருவரது ட்வீட்டுகளும் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த ஒரு கட்டத்தில் கஸ்தூரியை பிளாக் செய்வதாக வனிதா தெரிவித்தார்.


மேலும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கடும் வாக்குவாதம் நடத்திய வனிதா, பிரச்னை என்னவென்றே தெரியாமல் மூக்கை நுழைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த மோதலின் அடுத்தகட்டமாக பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு திரட்டினார். அதற்காக #ISupportElizabeth என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அனைவரும் பதிவிடுங்கள் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க: ₹ 300 கோடி பண மோசடி வழக்கு - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

இதனிடையே ட்விட்டரில் இருந்தே விலகிய வனிதா விஜயகுமார் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், நாஞ்சில் விஜயன் ஆகியோர் தன்னை பற்றி அவதூறாக பேசியாத, ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாக போலீசில் புகாரளித்துள்ளார்.முன்னதாக வனிதா அளித்த புகாரின் பேரில் சூர்யா தேவியை போலீசார் கைது செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading