வனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான சூர்யா தேவி ஜாமினில் விடுதலை

நடிகை வனிதாவை கொலை மிரட்டல் மற்றும் அவதூறு பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட  சூர்யா தேவியை நீதிமன்றம் ஜாமினில் விடுதலை செய்துள்ளது.

வனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான சூர்யா தேவி ஜாமினில் விடுதலை
வனிதா விஜயகுமார் | சூர்யா தேவி
  • Share this:
நடிகை வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து சமூகவலைதளத்தில் இந்த விவகாரம் சர்ச்சையானது. பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி சூர்யா தேவி என்பவர் இதற்காகவே யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி அதில் வனிதா விஜயகுமாரை விமர்சித்து வீடியோக்கள் பதிவிட்டார்.

வனிதாவும் பதிலளிக்கும் வண்ணம்  பல்வேறு கருத்துக்களை வீடியோக்களாக வெளியிட்டுள்ளார். இதனையடுத்து போரூரில் நடிகை வனிதா சூர்யா தேவி மீது புகார் ஒன்றை அளித்தார். அவதூறு பரப்புவது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி புகார் அளித்திருந்தார். மேலும் வடபழனியில் நடிகை வனிதா மீது சூர்யா தேவி புகார் அளித்திருந்தார்.


இந்த அனைத்து வழக்குகளும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது . நடிகை வனிதாவையும், சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். இதுபோன்று வீடியோக்கள் அவதூறு செய்து வெளியிடக்கூடாது என இருவரையும் போலிசார் எச்சரித்தனர்.

இதனை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா மீது அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட சூர்யா தேவியை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சூர்யா தேவியை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவு பிறபித்தார்.

மேலும் படிக்க:தடையை மீறி நடிகர்கள் சூரி, விமல் கொடைக்கானல் சென்றதாக புகார் - வனத்துறை விசாரணை

ஏற்கெனவே முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் தற்போதைய தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக பேசிய விவகாரத்தில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading