வனிதா விஜயகுமார் ரகசியமாக 4-வது திருமணம் செய்து கொண்டார் என்று இணையத்தில் தகவல் வெளியான நிலையில் அதற்கு அவர் பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில்
வனிதா விஜயகுமார் கலந்து கொண்ட பின் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமடந்தார். கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடனான திருமண வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிசியாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவரை
வனிதா விஜயகுமார் திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால் திருமணம் குறித்து அவர் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால்
வனிதா விஜயகுமாரின் திருமணம் மீண்டும் பேசுபொருளாக மாறியது. ஆனால் இணையத்தில் திருமணம் குறித்து வெளியான தகவல் அனைத்து வதந்தி என்று அந்த சர்ச்சைக்கு தற்போது முற்றிப்புள்ளி வைத்துள்ளார் வனிதா.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். அப்படியே இருக்க விரும்புறேன். எந்தவொரு வதந்தியையும் பரப்பவோ நம்பவோ வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.