Bell Bottom: வாணி கபூர், அக்‌ஷய் குமாரின் பெல்பாட்டம் ரொமான்ஸ்!

பெல் பாட்டம்

பெல்பாட்டம் படத்தின் முதல் சிங்கிளான மர்ஜாவான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

  • Share this:
    அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பிரமாண்ட இந்திப் படம் பெல்பாட்டம்.

    ரசிகர்கள் திரையரங்குக்கு வருவார்களா மாட்டார்களா என பெல்பாட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்தே முடிவு செய்ய முடியும் என்பதால், மொத்த இந்தித் திரையுலகும் பெல்பாட்டத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இந்திப் படங்களின் பெரும் சந்தையான மகாராஷ்டிராவில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. டெல்லி, குஜராத் என சில மாநிலங்களை மட்டும் நம்பி பெல்பாட்டம் வெளியாகிறது. அதேநேரம் ஒரு நல்ல செய்தி, பெல்பாட்டம் பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெல்பாட்டம் படத்தின் முதல் சிங்கிளான மர்ஜாவான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கோடிகளை தாண்டிய பார்வைகளை இப்பாடல் ஏற்கனவே பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பாடலில் அக்ஷய் குமாரும், வாணி கபூரும் ரொமான்ஸ் செய்யும் காட்சியை தயாரிப்பாளர் தரப்பு வெளியிட்டது. அதன் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று இரண்டாவது பாடலை வெளியிடுகின்றனர்.

    பெல்பாட்டம் படம் நேற்று சென்சார் ஆனது. படத்துக்கு எந்த கட்டும் இல்லை. சண்டைக்காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பெல்பாட்டத்தின் வெற்றியில் அக்ஷய் - வாணி கபூர் ரொமான்ஸ் காட்சிகளுக்கு கணிசமான பங்கிருக்கும் என்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: