முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

வாணி ஜெயராம்

வாணி ஜெயராம்

Vaani jayaram death | வாணி ஜெயராமின் திடீர் மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

இந்திய திரையுலகில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட 19 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை  பாடியுள்ள வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தனியாக வசித்து வந்தார்.  நேற்று மதியம் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

அவரின் உடலை  உடற்கூராய்வுக்காக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். உடற்கூராய்விற்குப் பிறகு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாணி ஜெயராம் உடற்கூறாய்வு அறிக்கை சொல்வது என்ன..?

இந்த நிலையில் இன்று காலை வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அஞ்சலி செலுத்தினார். பலரும் வாணி ஜெயராம் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், வாணி ஜெயராம் உடல் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க,ஸ்டாலினும் ஆணை வெளியிட்டுள்ளார்.

First published:

Tags: Chennai, Death, Singer