Vani Bhojan: முன்னணி நடிகரின் படத்தில் வாணி போஜன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Vani Bhojan: முன்னணி நடிகரின் படத்தில் வாணி போஜன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வாணி போஜன்

சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

  • Share this:
விக்ரமின் 60-வது படத்தில் நடிக்க நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தொலைக்காட்சியில் அறிமுகமாகி, சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகை வாணி போஜன் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். முதன் முதலில் அவர் நடித்த ‘தெய்வமகள்’ சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரம் வாணி போஜனுக்கு பெரும் ரசிகர்களைப் பெற்று தந்தது.

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையானார். தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ’சியான் 60’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.



வாணி ’சியான் 60-ல்’ நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த வாணி போஜன், அந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பது உற்சாகம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் ‘சியான் 60’ படத்தைத் தயாரிக்கிறார். கேங்ஸ்டர் படமான இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: