Home /News /entertainment /

சின்னத்திரை நயன்தாரா ’வாணி போஜன்’ எடுத்த முக்கிய முடிவு!

சின்னத்திரை நயன்தாரா ’வாணி போஜன்’ எடுத்த முக்கிய முடிவு!

வாணி போஜன்

வாணி போஜன்

சின்னத்திரையில் இருந்து வந்த ஒரு நடிகை தற்போது படு பிஸியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் கிளாமராக நடிப்பதில் தவறு இல்லை என கூறியுள்ளார்.

    சின்னத்திரையில் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சின்னத்திரை சீரியல்கள் நாள் தோறும் ஒளிபரப்பாகி வருவதால், அதில் நடித்து வரும் நடிகைகள் இல்லத்தரசிகள் மத்தியில் நன்கு பிரபலமாகி வருகின்றனர்.அந்த வகையில் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிபரலமாவர் வாணி போஜன்.  சன் டிவி  தெய்வமகள் சீரியலில் அறிமுகமான இவர், அந்த சீரியல்ல சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் தைரியமான பெண்ணாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது.



    ஸ்பெயினில் கெத்து பண்ண நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. தேசிய கொடியை பறக்க விட்ட மொமண்ட்!

    பின்பு வெள்ளித் திரையில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்னும் திரைப்படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயுமொளி நீ எனக்கு, தாழ் திறவாய், ஊர்க்குருவி, காசிமேடு போன்ற திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான மகான் படத்திலும் விக்ரமின் கேர்ள் ஃபிரண்டாக வாணி நடித்து இருந்தார். ஆனால் பல காரணங்களால் அந்த காட்சிகள் படத்தில் இருந்து அப்படியே வெட்டப்பட்டன, இதனால் வாணி ரசிகர்கள் கடுப்பாகினர்.

    உச்சக்கட்ட பரபரப்பில் மெளன ராகம்.. காதம்பரியை கைது செய்யும் போலீஸ்!

    படங்களில் மட்டுமில்லை வெப் சீரிஸிலும் வாணி போஜன் ஆர்வம் காட்டி வருகிறார். சிறந்த கதையை  தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வாணி போஜன் கதைக்கு தேவைப்படும் இடங்களில் கவர்ச்சியாக நடிக்க தயார் என கூறியிருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் சில கிளாமரான புகைப்படங்களும் வெளியாகியது. அதே போல் பட வாய்ப்புகளும் குவிய தொடங்கின, மொத்தத்தில் வாணி போஜன் செம்ம ஹேப்பி.



     




    View this post on Instagram





     

    A post shared by Vani Bhojan (@vanibhojan_)






    சின்னத்திரையில் இருந்து வந்த ஒரு நடிகை தற்போது படு பிஸியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாணி போஜனிடம் கவர்ச்சி குறித்து அண்மையில் கேள்வி எழுப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள அவர், “ கவர்ச்சியாக நடிக்கலாம்.. அதிலும் எல்லை ஒன்று இருக்கிறது. சாதாரணமாக புடவை கட்டினால் கூட கவர்ச்சி என்கிறார்கள். காலம் மாற மாற நம் சிந்தனையும் மாற வேண்டும்” என்று கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் கவர்ச்சியாக நடிப்பது உறுதி அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை வாணி போஜன் உறுதியாக தெரிவித்து விட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actress Vani Bhojan, TV Serial

    அடுத்த செய்தி