நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது - வானதி ஸ்ரீனிவாசன்

வலிமை அப்டேட்

"வலிமை" படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் "வலிமை" திரைப்படம் உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 • Share this:
  நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

  நடிகர் அஜித் அவர்களின் "வலிமை" படத்தைப் பற்றிய தகவலுக்காக நீண்ட காலமாக ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர். இதனையொட்டி "வலிமை" படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு, விருந்து கொடுக்க முடிவு செய்துள்னர். ரசிகர்களின் பேரார்வத்தை தணிக்கும் வகையில் "வலிமை" மோஷன் போஸ்டரை, படத்தின் முதல் தோற்றத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

  இன்று மாலை மோஷன் போஸ்டர் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே, படத்தின் தலைப்பு மற்றும் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாகி, வைரலாக பரவி வருகிறது, இது உலகளவில் "வலிமை" படத்தின் மீதான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டும்படி அமைந்துள்ளது.

  Also Read :  அஜித்தின் வலிமை படத்தின் அட்டகாசமான போஸ்டர்கள்! 

  இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் வலிமை அப்டேட் குறித்து ட்விட்டரில நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் வெற்றி பெற்ற உடன் வலிமை அப்டேட் வந்து விட்டது என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவிற்கு ரசிகர்கள் பலர் கேலியும், கிண்டலும் கலந்த கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.  "வலிமை" படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் "வலிமை" திரைப்படம் உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வலிமை படத்தின் ஃபர்ஸட் லுக் போஸ்டரை அஜித் ரசிகர்கள் உற்சகமாக கொண்டாடி வருகினறனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: