Valimai: 'வெற்றி பெற்றதும் வலிமை அப்டேட் நிச்சயம்’ - வானதி சீனிவாசன்!

அஜித் - வானதி சீனிவாசன்

'தேர்தலின் போது வாக்களிப்பது மட்டுமே அரசியலில் என் உச்சகட்ட தொடர்பு’ என அஜித் கூறியிருந்தார்.

  • Share this:
    வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வாங்கி தருவதாக பாஜக-வின் கோவை தெற்கு வேட்பாளர் வானதி சீனிவாசன், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெறுகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை தீர்மானித்து, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன. இருபெரும் கட்சிகளான திமுக-வும், அதிமுக-வும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரச்சாரத்தில் பிஸியாகி விட்டனர்.

    இந்நிலையில் நேற்று மாலை பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாஜக தொண்டர் ஒருவர் ‘வலிமை அப்டேட் எப்ப’ என ட்விட்டரில் வானதியிடம் கேட்டிருந்தார்.



    அதற்கு, ’நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி’ என பதிலளித்தார் வானதி சீனிவாசன். இந்த ட்வீட் உடனடியாக வைரலானது.

    இதற்கிடையே கடந்த 2019 ஜனவரி மாதம், ’அஜித் ரசிகர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவேண்டும்’ என அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை கூறியிருந்தார். இதற்கு உடனடியாக அறிக்கை வெளியிட்ட அஜித், ‘நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட எந்த ஆர்வமும் இல்லை. தேர்தலின் போது வாக்களிப்பது மட்டுமே அரசியலில் என் உச்சகட்ட தொடர்பு’ தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: