• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ்

அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ்

அஜித்

அஜித்

மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாளன்று வலிமை படம் குறித்த இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விளம்பர பணிகள் அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி மே 1-ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்திருந்த போனி கபூர், தமிழக திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸின் ராகுலுக்கும் கோபுரம் சினிமாஸூக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாளில் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அஜித் இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை முடித்திருப்பதாகவும் மற்ற நடிகர்கள் டப்பிங் பேசும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தின் அஜித் உடன் கார்த்திகேயா, ஹியூமா குரேஷி, சுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் நிலையில் படக்குழு நடிகர்களின் பட்டியலை வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

முன்னதாக ‘வலிமை’ படத்தில் அஜித்தின் ஓபனிங் பாடல் துள்ளலிசை பாடலாக அமைத்திருப்பதாகவும், விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் அந்தப் பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் ஒடிஷாவிலிருந்து திருவிழா ட்ரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து முதல் பாடலை பதிவு செய்ததாக இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: