Home /News /entertainment /

பிற மொழி வலிமை ட்ரெய்லர் மீது அதிக ஆர்வம் காட்டாத தமிழ் ஃபேன்ஸ்

பிற மொழி வலிமை ட்ரெய்லர் மீது அதிக ஆர்வம் காட்டாத தமிழ் ஃபேன்ஸ்

அஜித்

அஜித்

இந்தியாவின் பிரமாண்ட ஆக்சன் த்ரில்லர் படம் என்று, வலிமையை படக்குழுவினர் விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

    3 மொழிகளில் இன்றைக்கு வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

    ஜனவரி 13-ம் தேதி வலிமை படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாதம் 24-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அஜித் நடிப்பில் முதல் பான் இந்தியா படமாக வலிமை வெளியாகவுள்ளது. இதற்கு இந்திய திரையுலகில் ஜாம்பவானாக இருக்கும் போனி கபூரே முக்கிய காரணம். தற்போது வலிமை படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பிரமாண்ட ஆக்சன் த்ரில்லர் படம் என்று, வலிமையை படக்குழுவினர் விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க - Thalaivar 169: நெல்சன் திலீப் குமார், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ரஜினியின் தலைவர் 169!

    தமிழில் வெளியான வலிமை படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் உற்சாகத்தை அஜித் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் இன்று இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் வலிமை ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை இந்தியில் நடிகர் அஜய் தேவ்கனும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடாவில் கிச்சா சுதீப்பும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.







    3 மொழிகளில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டாலும் ஏற்கனவே பார்த்த காட்சிகள் மட்டுமே இடம்பெற்றதால் தமிழ் ரசிகர்களை மற்ற மொழி வலிமை ட்ரெய்லர் ஈர்க்கவில்லை. குறைந்தது ஒரு அப்டேட்டையாவது அஜித் ரசிகர்கள் மற்ற மொழி ட்ரெய்லரில் எதிர்பார்த்தனர்.

    இதையும் படிங்க - Valimai Trailer: பக்கா மாஸாக வெளியான அஜித்தின் வலிமை ட்ரைலர்!

    ஆனால், ரசிகர்களின் விருப்பத்தை போனி கபூர் அண்டு டீம் நிறைவேற்றவில்லை. இதனால், மற்ற மொழிகளில் வெளியான வலிமை ட்ரெய்லர் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. யூடியூபிலும் வலிமையின் மற்ற மொழி ட்ரெய்லர்கள் அதிக வியூசை தாண்டவில்லை என்பதே எதார்த்தம்.
    Published by:Musthak
    First published:

    Tags: Valimai

    அடுத்த செய்தி