Home /News /entertainment /

Valimai Trailer: பக்கா மாஸாக வெளியான அஜித்தின் வலிமை ட்ரைலர்!

Valimai Trailer: பக்கா மாஸாக வெளியான அஜித்தின் வலிமை ட்ரைலர்!

வலிமை

வலிமை

நடிகர் அஜித்தின் வலிமை ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

    அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் இந்தி, தெலுங்கு, கன்னட மொழி ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

    நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஐஸ்வர்யாவை பிரிந்ததால் நிறைவேறாமல் போன தனுஷின் நீண்ட நாள் கனவு

    தற்போது வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து வரும் 24-ம் தேதி வெளியாகக் காத்திருக்கிறது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், பாடல்கள் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவைகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

    இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிக் பாஸ் 5 பெண் பிரபலம் மீது புகார்



    இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்தார் தயாரிப்பாளர் போனி கபூர். அதற்கேற்றபடி தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதன் தெலுங்கு, இந்தி, கன்னடம் முறையே, மகேஷ்பாபு, அஜய் தேவ்கன், கிச்சா சுதீப் ஆகியோர் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

    ஏற்கனவே வெளியான தமிழ் ட்ரெய்லரின் டப்பிங் வெர்ஷனாகவே இந்த ட்ரெய்லர்கள் உள்ளன. இதில் படம் குறித்த புதிய அப்டேட் ஏதும் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith, Valimai

    அடுத்த செய்தி