நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் எச் வினோத் மற்றும் நடிகர் அஜித் குமார் ஆகிய மூவரும் கூட்டணி சேர்ந்த இரண்டாவது திரைப்படமான வலிமை பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலைப்பாட்டில், வலிமை திரைப்படத்தின் ரன் டைம், அதாவது திரைப்படத்தின் நீளம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதை அறிந்த அஜித் ரசிகர்கள், "ஆஹா இவ்வளவு நீளமான படமா!" என்று குஷியான வண்ணம் இருக்க, மறுபக்கம் சிலர் "இவ்வளவு நீளமாக இருந்தால் படத்தின் சுவாரசியம் பாதிக்கலாம் அல்லவா!" என்று இப்போதே நெகட்டிவ் கமெண்ட்களை தயார் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
பல மாதங்களாக வலிமை பட அப்டேட்டிற்காக கெஞ்சாத குறையாக அலைந்த அஜித் குமார் ரசிகர்களுக்கு, தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் தினமும் ட்ரீட் கொடுத்து வருகிறார். அதாவது வலிமை படத்தின் பல வகையான ஆக்ஷன் ப்ரோமோ வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளது.
வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியதுமே ரசிகர்கள் அதற்கு கொடுத்த வரவேற்பு ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இப்படம் ரீலீஸ் ஆன முதல் நாளிலே, தமிழ் நாட்டில் மட்டுமே ரூ.30 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் வலிமை படத்தின் ரன் டைம் குறித்த ஒரு அப்டேட் கிடைத்து உள்ளது. அதன்படி வலிமை படம் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு ஓடுமாம். அதாவது முதல் பாதி 1 மணிநேரம் 33 நிமிடங்களும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 26 நிமிடங்களும் ஓடும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.
சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களானது 2.30 மணி நேரத்தை ஒட்டிய ரன் டைம் -ஐ கொண்டுள்ளன. ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் தான் ரன் டைம்-ஐ பற்றி கவலைப்படாமல் வெளியாகின்றன. இதற்கிடையில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்கிற ரன் டைம்-ஐ கொண்டுள்ள அஜித் குமாரின்
வலிமை திரைப்படம் மிக மிக சுவாரசியம் மிக்கதாய் இருக்குமா! அல்லது ஓடிடி-க்காக தயார் செய்யப்பட்டு பின் தியேட்டர் ரிலீஸ் ஆகும் ஒரு படமாகி.. ஜவ்வு போல் இழுத்து அடிக்குமா? என்கிற கேள்வி எழுந்து உள்ளது.
நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை அறிவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
சினிமா விமர்சனம் செய்பவர்களுக்கு தான் நீளமான ரன் டைம் ஒரு குறையாக இருக்கும், ஆனால் ரசிகர்ளுக்கு 3 மணி நேரம் என்ன? 3.30 மணி நேரம் படம் ஓடினாலும் கொண்டாட்டம் தான் என்பது வெளிப்படையான வாதம்!
தனுஷ் எனக்கு மருமகன் இல்லை - அதிர்ச்சியைக் கிளப்பிய ரஜினிகாந்த்
முன்னதாக வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தம் 4000 திரையரங்குகளில்
ரிலீஸ் ஆகிறது என்கிற ஒரு அப்டேட்டும் கிடைத்தது. இதுவரை நடிகர் அஜித் குமாரின் எந்தவொரு திரைப்படமுமே 4000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது கிடையாது என்பதால் இந்த சாதனையை படைக்கும் அஜித்தின் முதல் படம் - வலிமை தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.