• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது..

அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது..

அஜித்

அஜித்

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘வலிமை’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹைதராபாத் சென்னை, உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான படப்பிடிப்பை படக்குழு நடத்தி முடித்திருக்கும் நிலையில் சில ஆக்‌ஷன் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டமிட்டிருந்தது.

ஆனால் கொரோனா நிலைமையை தலைகீழாக மாற்றியதால் படப்பிடிப்பு தடைபட்டது. வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்ட காட்சிகளை உள்நாட்டிலேயே முடிக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.



ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் தமிழகத்தில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.



இதையடுத்து தற்போது ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் அஜித் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.



அஜித் இல்லாமல் சிறு சிறு காட்சிகளை படக்குழு படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள் அஜித்தின் தீவிர ரசிகர்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: