Home /News /entertainment /

Valimai Review: அஜித்தின் வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது?

Valimai Review: அஜித்தின் வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது?

வலிமை விமர்சனம்

வலிமை விமர்சனம்

அஜித்தின் உடல்மொழி மற்றும் மிடுக்கான தோற்றம் அஜித் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பதிவிடுகிறோம்

வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகும் திரைப்படம் என்பதால், இந்த திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

செயின் பறிப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பைக் ரேசிங் குழுவை, அஜித் காவல்துறை அதிகாரியாக சாதுர்யமாக தேடிக் கண்டுபிடிப்பதை படத்தின் ஒரு வரி கதையாக எடுத்துக்கொண்டு, ஹெச் வினோத் படத்தை முழுக்க முழுக்க பைக் ரேசிங் காட்சிகளின் பின்னணியில் உருவாகியுள்ளார். ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகளில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டுள்ள படக்குழு, படத்தின் சண்டைக்காட்சிகளை ஹாலிவுட் தரத்தில் உருவாக உழைப்பை கொட்டி உள்ளது.

மளிகை சாமான் வாங்கினால் வலிமை டிக்கெட் ஃப்ரீ! ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆஃபர்!

அஜித்தின் உடல்மொழி மற்றும் மிடுக்கான தோற்றம் அஜித் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. பார்ப்பதற்கு ஹாலிவுட் திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை வழங்க வேண்டும், என உழைத்த எச் வினோத், படத்தின் திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தியிருந்தால் வலிமை திரைப்படம் மேலும் வலிமையாக அமைந்திருக்கும். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்திகேயா, தெலுங்கு முகத்தில் பேசும் வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஒட்டாமல் போவதும், அவரது முக பாவங்கள் தேர்ந்த நடிகரை போல் இல்லாததும், பார்க்கும் ரசிகர்களுக்கு சற்றே அயர்ச்சியை உருவாக்குகிறது.

வலிமை முதல் காட்சி தாமதம் - நாட்டு வெடி வெடிக்க முயற்சி செய்த ரசிகர்கள்

விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, செண்டிமென்ட் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதை அஜித் உணர்ந்ததன் காரணமாக, இந்த திரைப்படத்தின் அம்மா செண்டிமெண்டை கையில் எடுத்து ஆக்ஷன் காட்சிக்கு இடையிடையே, சென்டிமெண்ட் காட்சிகள் சொருகப்பட்டாலும் அது ரசிகர்களை வெகுவாக கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மையக் கருவும், சமுதாயத்திற்கு போதைப்பொருளுக்கு எதிராக பேச நினைத்த கருத்துக்களும், பெரும் பாராட்டுகளைப் பெறுகின்றன.

முதல் பாதி வெறித்தனம்! வலிமை படம் குறித்து ரசிகர்கள் கருத்து

யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை பணியில் இருந்து நீக்கப்பட்டு ஜிப்ரான் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டது யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் பொழுது யுவன் இசையமைத்திருந்தால் மேலும் திரைக்கதை சுவாரசியமாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பைக் சேசிங் காட்சிகளுக்காகவும், அஜித் தோன்றும் சண்டைக் காட்சிகளுக்காகவும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வலிமை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Ajith, Movie review, Valimai

அடுத்த செய்தி