Home /News /entertainment /

கடும் போட்டிக்கு நடுவில் வலிமை வெளிநாடு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்!

கடும் போட்டிக்கு நடுவில் வலிமை வெளிநாடு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்!

வலிமை

வலிமை

வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கடுமையான போட்டிக்கு நடுவில் ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியுள்ளது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை 2022 ஜனவரியில் வெளியாகிறது. இதன் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வாங்கியிருந்தார். தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிட்டன. இந்நிலையில் வெளிநாடுகளுக்கான விற்பனை தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை தவிர்த்துப் பார்த்தால் தமிழ் படங்கள் அதிகம் வசூல் செய்வது வடஅமெரிக்கா (யுஎஸ்), ஆஸ்திரேலியா. இந்த இருநாடுகளின் வலிமை திரையரங்கு விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளது. கடும் போட்டிக்கு நடுவில் இதனை அந்நிறுவனம் சாதித்துள்ளது. அத்துடன் பிரான்ஸ் நாட்டின் விநியோக உரிமையையும் இந்நிறுவனமே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா இடத்தில் சிவாங்கி? விஜய் டிவி எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இரு தினங்கள் முன்பு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. அதில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் படம் மீதான மைலேஜை அதிகப்படுத்தியுள்ளது. அதேநேரம், அல்லு அர்ஜுனின் புஷ்பா, ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படங்களும் சண்டைக் காட்சிக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகியுள்ளன.

also read.. மீனாவுக்கு வந்த அடுத்த சோதனை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இனி எல்லாமே ஐஸ்வர்யா தான்!

வலிமைக்கு முன்பு இந்தப் படங்கள் வெளியாகின்றன. அவற்றின் சண்டைக் காட்சிகளுடன் வலிமை சண்டைக் காட்சிகள் ஒப்பிட்டு பேசப்படும் என்பது வலிமைக்கு ஒரு சவாலும்கூட.சண்டையில் யார் ஜெயிக்கிறார்கள் பார்ப்போம்.
-


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:

Tags: Actor Ajith, Kollywood, Valimai

அடுத்த செய்தி