முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / valimai OTT சாதனையால் அரண்டு போன நிறுவனம்!

valimai OTT சாதனையால் அரண்டு போன நிறுவனம்!

valimai OTT  release: இதுவரை 500 மில்லியன் நிமிடங்களுக்கு வலிமை பார்க்கப்பட்டு இருப்பதாக ஸீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது.

valimai OTT release: இதுவரை 500 மில்லியன் நிமிடங்களுக்கு வலிமை பார்க்கப்பட்டு இருப்பதாக ஸீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது.

valimai OTT release: இதுவரை 500 மில்லியன் நிமிடங்களுக்கு வலிமை பார்க்கப்பட்டு இருப்பதாக ஸீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

வலிமை படத்தின் ஓடிடி சாதனையைப் பார்த்து அதனை வெளியிட்ட நிறுவனமே அரண்டு போய் உள்ளது.

அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியான திரைப்படம் வலிமை. இதில் இடம்பெற்ற  பைக் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. தற்போது ஸீ5 ஓடிடி தளத்தில் வலிமை வெளியாகியுள்ளது. ஓடிடியில் வலிமை ஏற்படுத்திய சாதனை அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

வலிமை திரையரங்கில் வெளியான போது கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. படத்தின் திரைக்கதையில் இயக்குனர் கோட்டை விட்டதாக கடுமையான விமர்சனங்களும் எழுதப்பட்டன. ஆனாலும் படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார். 200 கோடிகளுக்கும் மேல் படம் வசூலித்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதேநேரம் திரைத்துறையில் இயங்கி வரும் பலரும் வலிமை நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறினார். \

சென்னை,  செங்கல்பட்டு ஏரியாவில் வலிமை 10 சதவீத நஷ்டத்தையும், அதற்கு வெளியே உள்ள ஏரியாக்களில் 20 சதவீத நஷ்டத்தையும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ஏற்படுத்தியதாக,  திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தர் சங்க உறுப்பினருமான கே.ராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஓடிடியில் வலிமையானது வெளியிட்டது. இதுவரை 500 மில்லியன் நிமிடங்களுக்கு வலிமை பார்க்கப்பட்டு இருப்பதாக ஸீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது 50 கோடி நிமிடங்கள் வலிமை ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. இது ஒரு சாதனை.

வலிமைக்கு கிடைத்த விமர்சனங்களை வைத்து பார்க்கையில் இது மிகப்பெரிய வரவேற்பு. படத்தை ஓடிடியில் வெளியிட்ட ஸீ5 நிறுவனமே இந்த வரவேற்பில் அசந்து போயுள்ளதாக  தகவல்கள் கூறுகின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Ajith, Ajithkumar, Valimai