Home /News /entertainment /

Valimai: வலிமை ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு...?

Valimai: வலிமை ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு...?

வலிமை

வலிமை

Valimai: வலிமையில் அஜித்துடன் ஹுமா குரோஷி, கார்த்திகேயா, சுமத்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்து படத்தை எடுத்திருக்கிறார் வினோத்.

  • News18
  • Last Updated :
இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களுள் ஒன்று வலிமை. பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை திரைக்கு வந்தது. இதுவரை வெளியான அஜித் படங்களில் முதல் நாள் அதிக வசூலை பெற்ற படம் என்ற சாதனையை வலிமை படைத்திருக்கிறது.

வலிமைக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வாரயிறுதியில் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாகி வருகின்றன. வாரநாட்களில் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான் வலிமையின் திரையரங்கு வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும். அதேநேரம் திரை அரங்குக்கு வெளியே மிகப்பெரிய வசூலை வலிமை பெற்று இருக்கிறது.

வலிமையின் சாட்டிலைட் டிஜிட்டல் ஓடிடி உரிமைகளை ஸீநெட்வொர்க் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 65 கோடிக்கு அனைத்து மொழிகளுக்குமான உரிமையையும் அவர்கள் வாங்கியிருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன. வலிமையை நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதாவது அடுத்த மாதம் மார்ச் 25 வலிமை ஓடிடியில் வெளியாகலாம் என்கின்றன தகவல்கள்.

Also read... விஜயகாந்த் நடிக்கும் படம் குறித்த அப்டேட்

வலிமையில் அஜித்துடன் ஹுமா குரோஷி, கார்த்திகேயா, சுமத்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்து படத்தை எடுத்திருக்கிறார் வினோத். அஜித்தின் தீவிர ரசிகர்களை தவிர பொது பார்வையாளர்களை படம் கவரவில்லை. ஓப்பனிங்கில் கிடைத்த வரவேற்பு வாரநாட்களில் தொடருமா அல்லது தொய்வடையுமா என்ற கலக்கத்தில் உள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Ajith, Valimai

அடுத்த செய்தி