அஜித்தின் வலிமை படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறார்கள்.
திரைப்படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை முன்பு முக்கிய வியாபார அம்சமாக பட தயாரிப்பாளர்களால் கருதப்பட்டது, இப்போது அந்த இடத்தை ஓடிடி ஒளிபரப்பு உரிமை பெற்று இருக்கிறது. படங்களின் ஓடிடி உரிமையை வாங்க மிகப் பெரிய நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. வலிமை படத்தின் ஓடிடி உரிமையை zee5 ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது. வரும் 25ஆம் தேதி zee5 இல் வலிமை வெளியாகிறது.
இதையும் படிங்க.. விஜய்யின் பீஸ்ட் பாடலை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்ன செய்தார் தெரியுமா?
அஜித் நடித்த வலிமை படத்தை போனிகபூர், zee நெட்வொர்க் இணைந்து தயாரித்திருந்தனர். இதனால் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை zee நெட்வொர்க்குக்கே செல்லும் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இந்நிலையில்
மார்ச் 25ஆம் தேதி வலிமை படைத்தை zee நெட்வொர்க்கின் ஓடிடி தளமான zee5 இல் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
இதையும் படிங்க.. பிரதமருக்கு சவால்விட்ட பிரபல இயக்குனர்!.
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வலிமை ஓடிடியில் வெளியாகிறது. வலிமைக்கு இருவேறு விமர்சனங்கள் இருந்தாலும் படம் நல்ல வசூலை பெற்றது. தற்போதும் சில திரையரங்குகளில்
வலிமை ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித்தின் அடுத்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்குகிறார். இது குறுகியகால தயாரிப்பாக இருக்கும். இதில் அஜித் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.